அனிச்சை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனிச்சை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜனவரி 09, 2022

கருவறையில் தங்கிய மிச்சம்

     கால் வைக்க முடியாதபடி கொழகொழத்துக்கிடக்கும்

பாதையை எப்படியோ தாண்டிவிடுகிறேன்

ஒருநாள்தானே
நாளை உலர்ந்துவிடும் என்ற
நினைவின் கைபிடித்தபடி
*************************************************
பிணைத்து வைத்தே பழக்கமான கால்கள்
அறுந்த
சங்கிலியை உதறப்பார்க்கின்றன
அனிச்சையாய்

***********************************
புதிய தருணங்கள்
என்று நம்பிதான்
கதவைத்திறந்து தலையசைத்து
அகலப் புன்னகையுடன் வரவேற்றாய்
அதில் வீசிய துர்வாடை
புறப்பட்டுவந்த கருவறையில் தங்கிய மிச்சம்
கண்டுபிடித்துவிட்டாய்
எனச் சொல்ல முடியாதபோது
அத்தனை உலர்ந்த புன்னகைக்குள்தான்
மூக்கைப் பிடித்துக்கொண்டு
ஒளிய வேண்டியிருக்கிறது

வெள்ளி, அக்டோபர் 02, 2020

நீர்மையின் காட்சிகள்

 

மஞ்சள்படிந்த படித்துறையின்
பாசிஓரங்களில்
எப்போது விழுந்த விதையுடையதென்று
தெரியாத
குட்டிஇலைகள் காட்டும் புதுப்பச்சையை
அனிச்சையாய்க் கிள்ளியபடி
குட்டையாய்க் கிடக்கும் நீருக்கும் 
ஒரு கல்லை எறிந்துவிட்டு...
போய்விடுகிறாய்
கவலையின்றி

*****************************************************

நீர்மையில்லாத புன்னகையோடு
நீ விஸ்தாரமாகப்
பாராட்டிக் கொண்டிருக்கும் போது

சடசடவெனக் கேட்டது
வேறொன்றுமில்லை
அன்பின் கோட்டை என்று நீ சொன்னாயே
அது நொறுங்கிய சப்தம்தான்

 *************************************************

 ஒரே ஒரு இலை 
எங்கிருந்தோ வந்து முன்வாசலில் கிடக்கிறது
ஒற்றையிலைக்கும்
வழியற்ற கற்கூடுகளின் நடுவே
என்னவோ ஆயாசத்தில் கிடக்கும்
முதுமகள் போலக் 
கிடந்தது சிலநொடி
முந்தானை உதறி எழும் அவள்போலவே
கடந்தும்போனது

 

 

 

 

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...