நல்லவிளக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நல்லவிளக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், அக்டோபர் 25, 2021

தங்கள் வரவு நல்வரவானது

 படிப்படியாக வேகம் பெற்று

தேங்காய்ப் பத்தையைத் தன்னைவிட நைசாக அரைத்தெடுக்க முடிந்த மிக்சியை
அம்மா
தெய்வங்களின் இருப்பிடத்தில் வைக்க நேர்ந்தது
ஒரு தற்செயல்
எங்கள் சமையலறை அலமாரித் தட்டில்தான்
நல்லவிளக்கோடு
பொங்கல் வாழ்த்து அட்டையை
பழைய காலண்டரை அலங்கரித்து
பின்
சட்டமிடப்பட்ட ஓரிரு தெய்வங்களும்
உட்கார்ந்திருந்தன.
ஒடுங்கிக்கொண்டு
மிக்சியை வரவேற்பதில்
அவற்றுக்கும் ஒன்றும்
ஆட்சேபமில்லை

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...