அம்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அம்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், செப்டம்பர் 23, 2020

வந்த பயணம்

அவள் அம்மாவாக இருக்கலாம் சிணுங்கிய முகத்தோடு ஏதோ கடிகிறாள்

அம்மை
பதில் சொல்லத் திரும்பி
பின் ஏதோ முடிவுடன் நேராகப் பார்த்தபடி உட்கார்ந்து கொண்டாள்
உடையின் அசௌகரியத்தை நகர்தலின்மூலம் சரி செய்ய எண்ணியவள் போல நகர்ந்தாடியதில் ஐந்து நிமிடத்துக்கொரு முறை
அவள் இருக்கையின் பின்புறம்
என் முழங்காலில் இடித்துக் கொண்டிருந்தது
இந்தப் பேருந்துப் பயண
இரவு முழுதும் இப்படித்தானா
எரிச்சலுடன் எழ முயன்றபோது இடுக்கு வழியாகத் தெரிகிறது அவள் மேடிட்ட வயிறு

நாற்பதுகளின் கால்வீக்கத்தைக் குனிந்து பார்த்தபின்
சற்றே சாய்ந்து கொண்டேன்

புதன், ஏப்ரல் 08, 2020

என்னைப்பாரடி

அக்கம்பக்கம்
இடித்துக்கொள்ளாமல்
பார்த்துத்திரும்ப
வழிகாட்டி முடித்ததும்
ஐந்தோ பத்தோ நீட்டி
ஒரு
அவலச்சிரிப்பைப் பெற்றுக்கொள்
அவன்கும்பிடு இங்கு
உன் கும்பிடு எங்கோ
வாங்கிக்கொடு
கொடுத்து வாங்கு
எல்லோருக்கும்
இருக்கிறது
ஒரு வாசல்


*************************************************************
மாற்றிமாற்றிக் கட்டிப்பார்க்கிறேன்
சார்த்திய காஞ்சிப்பட்டுக்கும்
காக்காபொன்னுக்கும்
மலர்க்கண்
எப்போதும் அப்படியே
அம்மை
கிளியை விட்டு என்னைப்பாரடி
ஒருமுறையேனும்

**********************************************
எங்கும் பார்த்திராதவள் என்று தெரிந்தாலும்
எங்கோ பார்த்ததுபோல்தான்
இருக்கிறது
நினைவைத்தொட்டு
இட்டுக்கொள்
ஒரு பொட்டு

************************************

ஞாயிறு, அக்டோபர் 14, 2018

உடைந்தது

உங்கள் தெருவிலும்
கேட்டிருக்குமே
உங்கள் மூதாதைக்
காலத்தின் நீலத்தில்
வானத்தை மாற்றுபவன் குரல்
அதற்கு முன்னர் வந்தானா
பின்னரா
கடலை மாற்றுகிறவன்
உடைந்தது எதுவாயினும் பற்றவைப்பேனென்று
நேற்று ஒருவன் கூவியது கேட்டீரோ

என் அம்மை 
மனசைக் கையிலெடுத்துக்கொண்டு 
வாயிலுக்கும் உள்ளுக்குமாக
நடந்துகொண்டிருக்கிறாள்
வந்தால் சொல்லுங்கள்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...