ஆனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, செப்டம்பர் 27, 2019

எல்லாவற்றுக்கும் ஒருநேரம் வர வேண்டும்


நீங்கள் தொட்டச்சும் சொல்
மாறிப்போகாமல் வர
நகரில் பெய்யும் மழை உங்கள் வாசலுக்கும் வர
உங்கள் வாகனம் திரும்பியபின் சிக்னல் விழ
உங்கள் அட்டைக்கு
இயந்திரம் நூறுகளாகத்தர
உங்கள் விலையென்ன என
உங்களுக்கே தெரியவும் கூட
ஒருநேரம் வர வேண்டும்.
நிலைக்கலாமா
கலைக்கலாமா
என்பதற்கும் ஒரு நேரம்
இருக்குமாப்போல.
**************************************************************
மனத்தண்டு ஆடிக்கிடக்கிறது
உதிர் உதிர்
இழுக்கிறது காற்று
இன்று என்பதென்ன
இன்னும் இருப்பதுதானே
************************************************
திரைக்கு இந்தப்பக்கம்
பிளிறியபடி வருகிறது ஆனை
ஆவேசத்தில் தந்தமே ஆடுமொரு தோற்றம்
அந்தப்பக்கம்
சலனமற்று
கரைக்கும் குளத்துக்கும் 
தாவிக்கொண்டிருக்கிறது தவளை
*****************************************************************
சரியாக்கித் தரேன்
என்றதும்
வியந்து பார்க்கிறாய்
கடிகாரமோ அழிச்சாட்டியமாக
3 16 காட்டியபடி
ஒருவாரமாக நிற்கிறது
சாவிகொடுக்கும் கடிகாரத்தின் காலம் 
முடிந்தபிறகு வந்தது இது
பெண்டுலத்துக்கும் முள்ளுக்கும் 
ஒத்திசைவு இல்லாமற் போயிற்று
இயக்கமும்
இயக்கமற்றிருத்தலும் ஒருசேர இம்சையாகின
வெளிப்பட்டு ஓடத் திட்டமிருக்கலாம் முட்களுக்கு
உறைந்த கோணத்தில்
உறையமறுக்கிறது காலம்

துதிக்கை

கோயில் முன்நின்று ஆசீர்வதித்த யானை 
புறப்படுகிறது தங்குமிடத்திற்கு
அவசரமாக ஒருவர் 
அருகம்புல்கட்டுகளை நீட்டுகிறார்
அதே தொனியில் 
துதிக்கையைச் சுழற்றித் 
தலைதொட்டுவிட்டுப் போகிறது
பாகனுக்குப்பசி போலும்
விரைந்து எட்டு வைக்கிறான்
வாழைப்பழம் வாங்கிக்கொண்டு 

கடையிலிருந்து வந்து பார்த்த
குழந்தை

 " ஆன......" என்று அழும் குரலுக்கு 
துதிக்கை போலவே வளைந்தாடியது 
ஆனையின் வால்.

செவ்வாய், அக்டோபர் 23, 2018

அம்மாவின் பழஞ்சீலை

வாழ்வை வாழ்வாக்கிடும் பூங்குயிலை
 பார்க்கவே நேரவில்லை
ஆயினும் அதற்கோர் வருத்தமுமில்லை
எனக்கொரு தரிசனமுண்டோ

****************************************************************
காரைபெயர்ந்த சுவரெங்கும் படிந்த 
மழை ஈரத்துக்குள் 
ஆனை துதிக்கை உயர்த்த
அம்பாரியில் விரிக்கப்போதுமாய் இருந்தது
அம்மாவின் பழஞ்சீலை

*****************************************************************
கதவைத் திறந்திருக்கையில்
வெளியேறுவதைப் பற்றிய கவலையில்லை
மூடிய சன்னல்களின் இடையே 
எம்பிக்குதிக்கத் தோன்றுமளவு

*****************************************************************
முழங்காலில் முகம்புதைத்து 
விழியுயர்த்திப் பார்த்திருந்த சன்னலுமில்லை 
வாயிலுமில்லை 
அங்கிருந்து நீண்ட வெளியுமில்லை
நீயுமில்லை

****************************************************************
நீள் தொரட்டிக்கும் வளைகிளைக்கும் நடுவே 
இறுக்கிக்கொள்ளமுடியாத 
பற்றைத்துறந்த ஒற்றை முருங்கை 
வரமறுத்த வீம்பின் திருப்தியோடு 
கொதிக்கிறது
அவள் கிளறிக்கொண்டிருக்கிறாள்

**************************************************************
படம் ராமலக்ஷ்மி ராஜன் 


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...