விபத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விபத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், பிப்ரவரி 12, 2013
புதன், ஜனவரி 30, 2013
ஸ்னேஹலதாவுடன் ...
இந்த இக்கணம்
என்னுடையது....
காற்று அறையும் முகத்தில்
வந்து வந்து விழும்
கற்றை முடியொதுக்கி
ஒதுக்கி...
கைநோவதும் பொருட்டில்லை...
வெம்மையின் உப்பு பூசும்
ஒவ்வொரு நொடியும்
கூடிக் கூடி
என்னுடையதாகும்
கணங்களில் இருக்கிறேன்..
ஸ்னேஹலதாவைச்
சந்திக்கச் செல்லும்
இந்தப் பயணம் முக்கியமானது...
ஒவ்வொருமுறையும்
இந்தக் கணங்களைப் பற்றிக்
கதைத்திருப்பது
எங்கள் வழக்கம்...
எதுவும் சொல்லமாட்டாள்
இம்முறை.
புதிதாய் வாங்கிய
கண்ணாடி
முன் நெற்றிக் குழலைக்
கண்ணிலிருந்து தள்ளி வைப்பதால்
அந்தக் கற்றை
காரணமில்லை -
துளிர்த்து இறங்கும் துளிகளுக்கு..
நேற்றைய பயண விபத்தில்
மரித்து
கண்ணாடிப் பேழையில்
உறங்கும் ஸ்னேஹலதா
கேட்டிருந்த
இதன் ஜோடிக் குளிர்க் கண்ணாடி
என் கைப் பையில்...
ஞாயிறு, செப்டம்பர் 30, 2012
காலமாகிய சாட்சி
அது அன்று பூத்திருந்தது ...
சம்பவம் நிகழ்ந்தபோது,
அதிர்ச்சியில் குலுங்கிப்
பனித்துளி உதிர்ந்தது,
அழுததுபோல் கூட
இருந்திருக்கலாம்...!
ஆனாலும்...
வாகனம் சறுக்கித் தடுப்போரம்
விழுந்த
சரவணக்குமாரின்
உயிர் பிரிந்த நொடியில்
என்ன கூவினான்
என்பதை-அந்த
நெடுஞ்சாலையோர அரளியால்
சொல்ல முடியவில்லை...
ஒருவேளை
அந்தச் செவ்வரளி நிறம்
அவனுக்குப் பிடிக்குமானால்
அல்லிவட்டத்தில்
அவன் ஆவி தஞ்சமடைந்திருக்கலாம் !
ஆனாலும்...
அது நேற்றாகிவிட்டதால்
எதையும் சொல்லாமல்
அந்த அரளி சாம்பிக்கிடக்கிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வாழ்ந்தா....
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
நேசத்துக்கு விளக்கவுரையை அவள் ரத்தத்தால் எழுதும் சமூகத்தின் விஷப்பிஞ்சு அவன் வெம்பும் வாழ்வுகளைப்பற்றி ஒருநாள் பேசிக்கலைவோம் கல்லெ...
-
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
மஞ்சள் சுண்ணாம்பு உதிர்ந்த காரை ஒழுகும் கூரை அடியில் சத்துணவு உண்டுவிட்டு பெயர்ந்த சிமெண்டுக் குழியில் இலவச சீருடை மா...