இடுகைகள்

October, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உன்னை எனக்குத் தெரியாதே

படம்
பார்த்ததுபோல் இருந்தாலும் பாராதுதான் போனேன்...

"நில்'...நின்றேன்... "பாராது போகிறாயே.". "உன்னை ...பார்த்ததில்லையே.".. "எல்லாம் அறிந்த முகம்தான் ..." அம்ஹம்... உறவா..நட்பா... "மன்னிக்க வேண்டும்...நினைவுக்கு வரவில்லை.." "தெரிந்துகொண்டே தெரியாது என்பது....." "தயவு செய்து நொடிக்காதே ... அ ....  ஏதாவது குறிப்பு தரக் கூடாதா... எங்கே பழக்கம்...பார்த்தது எப்போது ...ஏதாவது..." "உண்மையில் தெரியவில்லையா..." "உண்மையாய்த் தெரியவில்லை.."
"பொய்யையே பார்த்துப் பார்த்து பொய்யுடன் பொய்யாய் கலந்து உண்மையையே அடையாளம் மறந்து போனதோ..."
உண்மைதானா என்ற தயக்கத்துடன் நிற்கிறேன்... அடையாளம் தெரிந்தவர் யாரும் இருக்கிறீர்களா...