இளையராஜா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இளையராஜா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, செப்டம்பர் 06, 2019

ஹே ஹோ..ஹூ.....ஜல்லல்லா

விளம்பரத்தட்டியில் கண்ட சாலிடர் டிவி 
எப்போதோ காணாமல் போனது
சிரித்து துள்ளி ஓடி வாயசைத்த
 நாயகனும் இல்லை
அந்தப்பாதை அந்தக்கட்டிடம் 
எல்லாம் மாறின
எழுதியவரையும் இசைத்தவரையும் 
மாற்றி மாற்றி விமர்சித்து 
ஓய்கிறது உலகம்
குரலும் சுருதியும் வெட்டிக்கொண்டன 
ஒட்டியும் கொண்டன
ஆனால்
அந்தப் பொன்மாலைப் பொழுது
அது என்றும் எவரும் துறக்கவியலா
ஹே ஹோ..ஹூ.....ஜல்லல்லா

செவ்வாய், அக்டோபர் 23, 2018

ருருரூ ரூரூரூ மின்மினி

ருருரூ ரூரூரூ என்று தொடங்கிய 
ஜானகி
குரலைத் தாழ்த்தி 
மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது
என்று சேர்ந்துகொண்ட வாசு
அப்போது மொட்டையாகியிராது 
எண்ணெய் வழியும் கிராப்பு தலையும் 
பெரியகாலர் சட்டையுமாக 
எங்கோ பார்த்திருந்த இளையராஜா
கொடுங்கோலர்களே...
எத்தனை காலங்கடந்தும் 
இப்படிப் படுத்துபவர்களை பின்னெப்படி அழைப்பது

திங்கள், அக்டோபர் 15, 2018

ராஜ வாழ்க்கை

துள்ளலின் முணுமுணுப்புகளோடு
தொண்டையில் இறங்கிய
கானபானம் உனது
அப்போது அறியேன்
உன் படையலைப் பருகியே
வாழ்வைக் கொண்டாடுவேன் என
குமிழ்நிறைவுகளின் வண்ணமாக
நாணத்துக்குப்பூசிய செம்மையாக
இடாதுவிட்ட கண்மையாக
ரகசியங்களின் மேலிட்ட காப்பாக
பொறுப்புகளின் கனந்தாங்கும்
உற்ற கையாக
திரளும் கண்ணீரின் உப்பாக
பெருமூச்சுகளைக் கழுவித்துடைக்கும்
துடைப்பானாக
ஒன்றும் வேண்டாமென்றான பொழுதையும்
என்ன பெயரிடுவதெனக் கேட்டபடி கலந்துவிட்ட தயா

ஜூன் 2  2018

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...