mann maram puthusu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
mann maram puthusu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மார்ச் 28, 2012

நிழல் தேடவில்லை


புதிய மாடிப்படி .... 
                                                   
க்ரோட்டன்சின்  எதிரி! 
தொட்டி துறந்து 
வேர்பிடித்தபின் 
இளவெயிலும் படராத்தடுப்பாய் 
அது முளைத்தது !
இயலாமையோடு 
இடித்தபடி குரோட்டன்ஸ் 
அந்தப்பக்கத்தில் நிற்கும் 
வாழை ,முருங்கையிடம் 
விசாரித்தது
விதையா,பதியமா
எப்படி வளர்ந்தது மாடிப்படி என்று?

சனி, ஜனவரி 07, 2012

இழந்த வரங்கள்

காதலை கண்ணீரை
காத்திருப்பை
கூறுகளோடு பேரத்தை
ஆயாச இளைப்பாறலை   
போதை உளறல்களை
பெருங்கூச்சல் வம்புகளை
பறக்கும் பந்துகளை
பெத்தாங் குண்டுகளை
பக்கத்திருந்து
பார்த்திருக்க சாட்சியிலா
வெட்டவெளி மனிதர்களானோம்,,,,,

அனிச்சையாய்க் கிள்ளியபோதும்
ஆள்வைத்துத் தள்ளியபோதும்
எட்டும் தொலைவெலாம்
நின்றிருந்த
நெட்டை,குட்டை
நீள் உறவைப் பறிகொடுத்தோம்
சருகுகள் நொறுங்க
இல்லாத மின்சாரம்
இழப்பீடு...
எல்லாக் கதையோடும்
நடக்கிறோம் சுடச்சுட....
 பக்கத்திருந்து
பார்த்திருக்க சாட்சியிலா
வெட்டவெளி மனிதர்களானோம் 

புதுவை

கிளைகள்
கவித்த இருளால்
நகரம்
மறைந்திருந்தது
அதில்
வெளிச்சம்
உறைந்திருந்தது !
****************************
ஏதுமற்ற
வெளியில்
வெளிச்சம்
படர்ந்திருக்கிறது
இதில்
 இருள்
 நிறைந்திருக்கிறது  

இனி எதற்கும் யோசியுங்கள்

கடற்கரையில் காந்தி
தாண்டிவந்த காற்று
மனிதனைத்
தேடியது
இல்லை
எனச்சொல்ல
நாணி
இற்று விழுந்தன
எங்கள் மரங்கள்.

ஞாயிறு, டிசம்பர் 18, 2011

எது நடந்ததோ

இந்த இடம்
metro ரயிலுக்கு .....
எங்கெங்கும் கண்ட
பாகப்பிரிவினை அறிவிப்புக்கு
சவால் விட்டது
தடுப்பின் ஓரத்தில்
எட்டிப்பார்த்த செடி....
இரைச்சலின் சாகரத்தில்
இது எப்படியோ ....
யோசனையில் கண்மூடியது
பாலத்தடி நாய்

வியாழன், டிசம்பர் 15, 2011

தேவையில்லா நிழல்

கால காலமாய்
கரிதின்று கரிதின்று
புளி உதிர்த்த
மரங்களில் இனி இலக்கமிட வேண்டாம்!
மரங்களே இலக்கு ......
தூங்குமூஞ்சி ,புங்கை
துளிர் கொஞ்சம்
பாடம் செய்க!
அளவோடு உள்ளே
அவரவர்க்கு 
குளிர் பரப்பி பறக்கும் 
வாகன வரிசையின் 
அகலத்தேவைக்காக
அகற்றவேண்டும் அனைத்தும்...
தாருக்குப் பதில்
தங்கம் ஓடும்
சாலையில்
நிழல் கருணை தேடும்
மனிதனின் நிழலும்
வாராது!

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...