கடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், செப்டம்பர் 24, 2020

கரிப்புமணி

 

உப்பாக இருப்பதென்று ஆனபிறகு

கைப்பிடியென்ன

மேசைக் கரண்டியென்ன

 

*******************************************

 

கடல் எத்தனை நீளம்

எத்தனை ஆழம்

எத்தனை வேகம்

இருக்கட்டும்

இன்று அளத்தில் உறைந்தாலும்

இருந்திருக்கிறேனே

அந்த நீளத்தில்

ஆழத்தில்

வேகத்தில்

அப்படித்தான் கரிப்பேன்

 

ஞாயிறு, மார்ச் 22, 2020

இழுப்பறை வெளிச்சம்

திரையில் விரியும் கடல் கண்டு 
விரிகிறது மனதின் கடல்
கடலான கடல் விரியும்போது
திரையிட்டுக் கொண்டுவிடுகிறது 

மனம்

**********************************************************
நீ
கிண்டலாகச் சிரிக்கும்போது 
கண்ணில் தெறிக்கும் 
பிரத்யேக மினுக்கு
என் மேசை இழுப்பறைக்குள்ளிருந்து 
கண்கூசும் வெளிச்சம்
ஒன்றுவிடாமல் சேர்த்தது
**********************************************************
பிறகு
எல்லாமே தெரிந்திருக்கிறது
என்ற முகமும் 
பொருத்திக் கொண்டீர்கள்
********************************************************
சன்னலுக்கு வெளியே ஒளிரும்...
இருங்கள் ஒருநிமிடம்
திரைச்சீலை தள்ளி பார்த்துவிட்டு சொல்கிறேன்
ம்ஹூம்
கும்மிருட்டு
நல்லவேளை பார்க்கத் தோன்றியது


வியாழன், பிப்ரவரி 07, 2019

குவிந்த கண்ணொளி

தோல்விதான் என்று முடிவானபிறகும்
ஒரு புள்ளியில்தான்
என்றொரு சமாதானம்

******************************************
முணுமுணுப்பு
தொடங்கி
பெரு ஓலம் வரை
நுரைத்தே கடக்கிறது கடல்
நுரைக்கென்று அர்த்தமிலா கடல்
************************************************

இதழோரம் கசிந்துகொண்டிருந்தது
விஷமல்ல 
இளநகை
முன்பின் பார்த்திராத உனக்கு 
எப்படி அடையாளம் தெரியும்
பாவம்
****************************************************
ஒன்றுமில்லாத கையையும் குவித்து மூடி 
எதையோ போல் பாதுகாக்கும் 
பாப்புக்குட்டியின் கண்ணொளியில்
கருகிப்போகிறார்கள் 
எதையோ கைவிட்டவர்கள்
மிச்சம் யாரோ

****************************************************

வியாழன், பிப்ரவரி 21, 2013

அபி உலகம் -14




அபி கடல் பார்த்தாள் ..
"எவ்ளோ ஓஓஓஓ  ...தண்ணி...
யாரும்மா..ஊத்தினா...."
"ம்ம்ம் ...கடவுள்..."
"நீயும் அவங்கம்மா
மாதிரி இருக்கலாம்மா..."
டம்ளர் தண்ணீர்
கவிழ்த்தாலே குட்டு வாங்கும்
குட்டிக் கடவுளின் ஆதங்கம்...
****************************
கவனமாய்
முள் நீக்குகிறாள் அம்மா .
ஏன்மா..?
தொண்டையிலே மாட்டிக்கும் அபி.....
மாட்டிக்கிட்டா..
ம்ம்ம்ம் ..செத்துப்போய்டுவோம்..
எரிச்சல் தொனியில்
இன்னொரு கவளமும்
இன்னொரு நிமிடமும்
கடந்தபின் ...
"இந்த மீனோட அம்மா
இத சொல்லவே இல்லியாம்மா 
உன்ன மாதிரி..."
துண்டு மீன் தட்டில்
துள்ளியது மாதிரி இருந்தது !

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...