தருணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தருணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, பிப்ரவரி 05, 2022

சொல்பேச்சு

  தானே தன்னைப்பற்றி ம்பிக்கை வார்த்தை சொல்ல வேண்டியிருக்கும் தருணம் அவலமடா என்றேன்

முழு சகதி

அந்த அரைச்செங்கல்லில் நிற்கப் பார்க்கிறேன்
உனக்கு அதுவும் பொறுக்கவில்லையா என்கிறான்

******************************************************
கசம் கசம்
கீழே போடு
என்று விரட்டும் அம்மாவைப் பார்த்தபடியே
எக்காளச்சிரிப்போடு தத்தித்தத்தி நடந்து
பிடுங்கி எறிந்த குப்பையை எடுத்து
வாயில் வைத்துக்கொள்ளும்
குழந்தையாகத்தான் செய்கிறது மனது

********************************************************
”சொன்ன பேச்சைக் கேக்குற பழக்கம்
பரம்பரையிலேயே கிடையாது”

அடிக்கடி அம்மா சொல்கையில்
திட்டுகிறாளா
புலம்புகிறாளா
என்று எவரும் திரும்பிப் பார்க்காத வீட்டில்
யாரிடம்தான் சொல்கிறாள்
யோசிக்கிறது விளக்கு மாடம்
தன்னிடம்தான் என்று அதற்கும் தெரியவில்லை





திங்கள், அக்டோபர் 15, 2018

கறுப்புவெள்ளை ரோஜா

ஒரு கறுப்புவெள்ளைப்படத்தின் சாட்சியாக 
பட்டுரோஜாக்கள் மலர்ந்தன
கிள்ளிக்கிள்ளி ஊன்றிய
சிறு கிளைகள் தன் தலையில்
வாடாமல்லி நிறம் தென்படுகிறதா
என எக்கிக்கொண்டிருந்தன
அண்டை செம்பருத்தி இலைவழி 
சொட்டிய நீரை நுனிநாவால் பருகிய தருணம் 
பட்டுரோஜாவினும் பளீர் தருணம்
அதை நினைவில் நட்டு வைத்திருக்கிறேன்



வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...