சரிகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சரிகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, நவம்பர் 08, 2015

நினைவ(வி)லை

அந்த நொடியில்
உன்கண் எப்படிஒளிர்ந்திருந்தது
ஒருவிரல் உயர்த்தி
நீ சுட்டிநின்ற காட்சி
அதன் ஒயில்
கடல்பச்சையும் நீலமுமான உன்ஆடை
காற்றில் உயர்ந்துஅலைந்தஅதன்பிரி
சரிகையோ எனத் தோன்றவைத்த
ஒளியின் இழை

உன்இதழில் இருந்த புன்னகை
அன்பின்மிச்சமா
என்பதைத்தவிர
மற்றஎல்லாம் நன்றாகவேநினைவிருக்கிறது

அந்தப்புன்னகை நினைவில்லை
என்றாசொன்னேன்
இல்லையில்லை
புரியவில்லை

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...