தெளிவுக்கும் பிறழ்வுக்கும் இடையே
விசும்பலுக்கும்
வெடிப்புக்கும் இடையே
நிற்கும் உன் நிழலின்
புனைப் பெயர்
நானாயிருக்க நேர்ந்ததே
*********************************************
திரும்பத்திரும்ப சொல்கிறாய்
எல்லாம் என் நல்லதுக்குதான்
எனக்கு உலகமே தெரியாது
என்னை சுலபமாக ஏமாற்றிவிடுவார்கள்
ஒன்றும் சொல்ல வேண்டியிராது
உன்னையே பார்த்துக்கொண்டிருக்கிறேன்
*******************************************************************
விழுவதற்கென்று வந்தபோதிலும்
மஞ்சற்பொலிவு
குன்றா வெயில் சொன்ன செய்தி
புரிய
மனசுக்கும் வெளிச்சம் வேண்டியிருக்கிறது
*******************************************************************
ஒரு கோடிழுத்தாய்
எப்படியும்
வரலாம் ஒரு சதுரம் செவ்வகம்,முக்கோணம்
என்று நின்றபோது
என்னைச் சுற்றி வட்டம் முடித்துவிட்டாய்
உள்ளே நிற்பது என்றானபின்
சதுரமென்ன
வட்டமென்ன
கால்மாற்றி நிற்குமளவு
இடம்விட்டாயே தர்மபிரபு