பொட்டுக்கரண்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொட்டுக்கரண்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, மே 05, 2019

பொட்டுக்கரண்டியில் வார்த்த கடல்

வலியைச் 
சொல்லிப் புரியவைத்துவிட முடியுமென்ற
 நம்பிக்கையை
சலனமற்ற உன் முகம்தான் 
அபத்தமெனக் காறித் துப்பியது
***********************************************************
சின்னச்சின்னதாக
ஏதேதோ கொண்டுவந்து வைத்தாய்
தூக்கிஎறியத் தோதாக இருந்தது
சுண்டிப்போயிருக்கும் 
உன் கன்னத்தில் 
லேசாகத்தட்டிவிட்டுப் போக 
முடிந்தால் 
சரியான முற்றுப்புள்ளியாக இருக்கும்
நீ 
எங்கே

******************************************************
எவ்வளவு தவிப்பு
ஏக்கம்
கலவரம்
துயரம்
படபடப்பு
ஐயோ
கொஞ்சநேரம் மட்டும்
நான் அபிக்குட்டியானால்
ஏதாவது ஒருசொல்
ஒரு கண் உருட்டல் தலையசைப்பு
எதிலாவது புரியவைத்துவிடலாம்
என்ன செய்ய 

இந்த வயதை வைத்துக்கொண்டு
************************************************************
ஒரே கடல்தானாமே
பொட்டுக்கரண்டிதான்
உள்ளங்கையில்
வார்க்கிறது
நீ
பெருமாள்கோயில்
தீர்த்தமென ஒற்றி ருசிக்கிறாய்
நான்
என்னெதிரே காயும் 

தோசைக்கல்லில் தீற்றிக்கொள்கிறேன்

*************************************************************

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...