வெங்காயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெங்காயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, செப்டம்பர் 20, 2020

பலூன் சுருக்கு

 இருளில் காணாமற்போனான்

என்றிரங்கிக் கொண்டிருந்தவன்
வெளிச்சத்தில்தான்
காணாமற் போயிருக்கிறான்
நல்லாயிரு என விம்முவதா
துப்புவதா
குழப்பம்தான்

*******************************************

தப்பிக்க விரும்பும் காற்றுக்கு
மிதக்கும்
சோப்புக்குமிழ் வண்ணங்களின்
மேலொரு காதல்
பலூன் கழுத்தின்
சுருக்கல்லவா மனம் வைக்க வேண்டும்

***************************************************
சட்டென கற்றுக்கொண்டு விடுகிறேன்
முட்டைக்கோஸ்
சௌசௌ
சகலத்திலும் சட்டினியரைக்க
ஆனால் வெங்காயமென்னவோ
உன்னைப்போல்தான்
நீங்காஇடம்

**********************************************


வெள்ளி, டிசம்பர் 01, 2017

தளராடைவேளை

மாற்றிப்போட்ட சேலையின் ஓரப்பிசிறுவழி
கொடியிலிருந்து சொட்டிக் கொண்டிருக்கிறது
வெளியில் நான் விட்டுவந்த
மழை
கேட்கவேண்டும் எனத் தோன்றும் பாடல்கள்
எதையும் தேட நேரமில்லை
மெழுகுவத்தி கரைந்தே விடுமோ என்ற அச்சத்துடன்
ஊதிஊதி அணைத்து அணைத்து
ஏற்றிக் கொண்ட இரவுகளுக்கு
இருந்த வாசம்
இன்றைய நாசியில் அரூபமாய்
இறுக்கமாய்த் தோள் சார்த்திய வயலினை
இழைக்கும் விரல்களை நினைத்தபடி
வெங்காயம் நறுக்கும்
இந்த தளராடைவேளையின் பரபரப்பு
என்றாவது மணக்கக் கூடும்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...