இருள் கவிந்த இதயத்தில்
ஒளி
பரவக்காத்திருக்கிறது
ஜன்னல் சதுரம்...
பால்கனியின் கொடித்துணி .....
எதையும்
தாண்டிவரத் தயாராக ,
உன் கண் திறக்கக்
காத்திருக்கிறது!
ஒருவேளை நேரடியாக
'வெளி '- யின்
தரிசனம் தேடி
வெளியே வந்தால்
நேர்க்கோட்டு மின்னலாக
ஊடறுத்துப் பாயவும்
தயார்...
எழப் பிரியப்படாத
பூனையின் பசியோடு
இதயத்தை
தட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கிறாய்
எனத் தெரியாது காத்திருக்கும்
அது
நீ சோம்பல் முறிக்கையில்
தேநீர் அருந்தப் போய்விடலாம் .