பரபரப்பான
நகரச் சந்தடியில் தொடங்கியது ...
புறநகர்த்தனி வீடுகள்,
மிஞ்சிக் கிடந்த
வயல்பரப்பு
தொலைதூரச் சிறுமுகடு
தப்பிய மரக்கூட்டம்
சிற்றூர்க் கடை வெளிச்சங்கள் ....
கூடவே.......
நகர்ந்துகொண்டிருந்த
மேகங்களைக் காணோம் ...........
அனிச்சையாய்
வாய் துடைத்து
உறக்கம் மீண்டபோது.
முந்தையநாள் படக்கதையை
சுவாரசியமாய் நிகழ்த்துகையில்
கண் சொக்கும் ஆச்சியிடம்
கோபித்து எழுந்து செல்லும்
பேபியக்கா போல
மேகங்களும்
மீண்டுவரக்கூடும் !

புறநகர்த்தனி வீடுகள்,
மிஞ்சிக் கிடந்த
வயல்பரப்பு
தொலைதூரச் சிறுமுகடு
தப்பிய மரக்கூட்டம்
சிற்றூர்க் கடை வெளிச்சங்கள் ....
கூடவே.......
நகர்ந்துகொண்டிருந்த
மேகங்களைக் காணோம் ...........
அனிச்சையாய்
வாய் துடைத்து
உறக்கம் மீண்டபோது.
முந்தையநாள் படக்கதையை
சுவாரசியமாய் நிகழ்த்துகையில்
கண் சொக்கும் ஆச்சியிடம்
கோபித்து எழுந்து செல்லும்
பேபியக்கா போல
மேகங்களும்
மீண்டுவரக்கூடும் !