சூரியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சூரியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், செப்டம்பர் 23, 2020

தாளுக்குக் குறுக்கே

 பாப்புவுக்கு

ஒவ்வொரு சீசன்
ஒரு நிறத்தைப் பிடிக்கிறது
நன்றாகத்தான் இருக்கிறது
வெள்ளை சூரியன்
அப்படித்தான் சொன்னாள்
ஒரு முழுத்தாளை
குறுக்கே விரல் நீட்டுங்கள்
சுடும்
ஒப்புக்கொள்வீர்கள்

செவ்வாய், அக்டோபர் 04, 2016

போக்கிடம் இல்லா நிலவு

வீட்டுக்கு வெளியிலிருந்து சூரியன் சுட்டது.
வெளிச்சத்துக்காக எனப்பழகிக்
கொண்டீர்கள்.
உள்ளிருக்கும் மின்விளக்கும் சுடுகிறது.
இப்போது வெளியில் செல்ல
யத்தனிக்கிறீர்கள்
நிலவும் அதையே செய்கிறது
ஆனால்
வானத்தைவிட்டுப் போக்கிடம் இல்லாத நிலவின்மேல்
கொஞ்சம் இரக்கம் வையுங்கள்



வியாழன், ஜூலை 18, 2013

பொய்யா மொழி

பசுந்தளிர் துளிர்த்தபடி
தலையசைத்துக் காத்திருக்கட்டும்

இதயம்
குயில் வந்து அமரலாம்
குழலோசை வருடலாம்


மகரப்பொடி சிதறத்
தேனருந்தி வண்டு இளைப்பாறலாம்
கதிரின் இளஞ் சூடும்
சாரலின் தீண்டலும் பழகலாம்
இன்னும் என்னென்னவோ
சொன்னதை மறவாது
நம்பிக்கையோடு
துடித்திருக்கிறது இதயம்
சீனத்தின் முதுசொல்
இவ்வூர்க் கதிருக்கோ
குயிலுக்கோ
யார் விரித்துரைப்பார் .....


ஞாயிறு, ஜனவரி 13, 2013

ஒளியே வாழி!



ஒளியில் தொடங்குகிறது நாள்..
ஒளியில் தொடங்குகிறது உற்சாகம்
ஒளியில் தொடங்குகிறது உழைப்பு !
இருளில் நம்மை
இழந்துவிடாமல்
தினம்
கிழக்கின் வாசலில்
நீள்கிறது கதிர்க்கரம் !
வெளிச்சத்தின்
சக்தியை
கண்டபோது ..தொடங்கியது
மனித சரித்திரம்!
*****************************
வெளிச்சக் கூழைக்
குடித்துக் குடித்து
ஆடி வளர்கின்றன
பச்சைப் பயிர்கள்..
வெளிச்சம் தின்று
வெளிச்சம் தின்று
விரிகின்றன விருட்சங்கள் ...
உண்ட ஒளியை
உருட்டித் திரட்டி
காயாய் பூவாய்
கனியாய்க் கிழங்காய்
மனிதனுக்கு
ஊட்டி வளர்க்கின்றன
தாவரங்கள் ...
********************
நம்பிக்கை பொய்க்கா வண்ணம்
நடத்துவாய்
ஒளியே வாழி!வாழி!

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...