பட்டுரோஜா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பட்டுரோஜா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், அக்டோபர் 15, 2018

கறுப்புவெள்ளை ரோஜா

ஒரு கறுப்புவெள்ளைப்படத்தின் சாட்சியாக 
பட்டுரோஜாக்கள் மலர்ந்தன
கிள்ளிக்கிள்ளி ஊன்றிய
சிறு கிளைகள் தன் தலையில்
வாடாமல்லி நிறம் தென்படுகிறதா
என எக்கிக்கொண்டிருந்தன
அண்டை செம்பருத்தி இலைவழி 
சொட்டிய நீரை நுனிநாவால் பருகிய தருணம் 
பட்டுரோஜாவினும் பளீர் தருணம்
அதை நினைவில் நட்டு வைத்திருக்கிறேன்



வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...