கன்னாபின்னா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கன்னாபின்னா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், அக்டோபர் 10, 2019

கதவின் பெயர்

எனக்கு ஏன் கதவு என்று பெயரிட்டாய்
எனக்குப் பிடிக்கவில்லை
காற்றைப்பிடித்துக்கொண்டு
கன்னாபின்னாவென
ஆடி முட்டுகிறது கதவு
இதென்ன யாரைக்கேட்டுதான்
யாராவது பெயர் வைக்கிறார்கள் 

சொல்வதைக்கேள் 
காலங்கடந்து நிற்கும்
உனக்கெதற்கு வருத்தம்
மிதியடியெல்லாம் டோர்மேட் ஆக
நான் மட்டும் என்றும் கதவா
முழக்கத்திற்குப்பின் வந்த 

ஆமாம் கோரஸ் தான் 
அதனினும் பயங்கரம்
கதவையோ கதவின் பெயரையோ 

மாற்றிவிட்டுச் சொல்லுங்கள் யாராவது

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...