பழகிய இடங்களை விட்டுச்செல்வது பழகிய முகங்களை மறந்துபோவது பழகிய சொல்நடையை விட்டுவிடுவது
எல்லாம் பழகிவிட்டது
பிழைப்பு வாழ்வில்
ஊரின் தொனியில்
எவரோ பேசி சமன் குலைவதும்
பேருந்து தாண்டும்
ஒருதெருவுக்கு
நம் ஊர் எனத் தோற்றமிருப்பதும்
போக
சிலநாளாகத் தெருவில் போகிறாள்
ஸ்கூட்டி மங்கையொருத்தி
மூன்றாம் வரிசை சங்கரி போலவே
நிறுத்த வேண்டும்