ஆபரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆபரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், செப்டம்பர் 24, 2020

ஆஹாகாரம்

 

தெப்பத்தின் அடிக்கட்டையில்
நனைந்துகிடக்கும் மனதை
அறியாததுபோல
கிடைமட்டத்தில் நிறுவிக் கொள்கிறாய் 
இருவாசியும் பீடமும்
ஆபரணமும் அலங்காரமும்
ஒரே ஆஹாகாரம்
அழகு அழகு என்று

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஒருமுறைக்குப்
பத்து முறை
பத்துக்கு நூறுமுறை
யோசித்து உதிர்த்த
ஒரு சொல்
இப்போதும் அங்கேயேதான் கிடக்கிறது

உதிர்ந்த முருங்கைப்பூ போல

புதன், மார்ச் 30, 2016

ஆணவ ஆபரணம்

சொற்கள் எதிரேதான் கிடக்கின்றன
சில துளிகளோடு காய்ந்த
தேநீர்க்கோப்பை
சாய்ந்த சாயமா
செய்தித்தாளின் படத்திலிருந்து சொட்டிய 
பச்சை ரத்தமா
எதுவென்று தெரியாத
கறை படிந்த மேசை மேல்
எழுந்து என்ன செய்யப்போகிறேன் போ
என்ற ஆயாசத்துடன் கிடக்கின்றன
தொலைக்காட்சி மின்வடத்திலிருந்து சொட்டும் ரத்தம் நின்று
ஐந்தே நிமிடங்களில்
அடுத்த அரிவாள்
ஒவ்வொரு சங்கமாக
ஆதரவு அறிக்கை வாங்கி
அடுக்குங்கள்
ரத்தப்பொட்டுகள்
நாளாவட்டத்தில் காய்ந்து
நீலமாகி ஆட்காட்டி விரல்நுனியின் ஆபரணமாகிவிடும்
சொற்கள் அப்படியே கிடக்கட்டும் மனசுபோல
உலர்ந்துகொண்டு....


வெள்ளி, பிப்ரவரி 05, 2016

நடப்பு







ஆமோதிப்பதையே விரும்புகிறீர்கள்
குழந்தையின் சிணுங்கல் கூட
எதிர்ப்புக்குரலோ எனஅஞ்சுகிறீர்கள்
கொசுவிரட்ட
இடமிருந்து வலமோ
வலமிருந்து இடமோ
திரும்பும் தலைகளைக் கொய்யவும்
உங்கள் வாட்கள் தயங்குவதில்லை
அச்சமே ஆபரணம்
ஆத்திரமே ஆடை
எச்சரிக்கையாய் நாங்களும்
எரிச்சலாய் நீங்களும்
உலவும் மேடை
அதிர்கிறது இடைப்பட்டோர் குறட்டையில்




வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...