பழைய ஊறுகாய் பாட்டிலில் எண்ணெயும் தெருவாசல் அரளியுமாகப் பதினோரு சுற்று சுற்றிவருவதன் மூலம் அவள் பிறவிப்பெருங்கடல் தாண்ட விரும்பியதில்லை
கடவுள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடவுள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, டிசம்பர் 05, 2021
வேண்டுதல் வேண்டாமை
பிள்ளைகளின் மதிப்பெண் கூடுவது
கணவனின் சர்க்கரை குறைவது
வீட்டுக்கடனை
ஒழுங்காக அடைக்க முடிவது
வண்டி நொடிக்கும் நேரத்தில்
பிரேக் போடும் மாயம்
மட்டுமே வேண்டுவாள்
தொகுதிப் பிரமுகர் போலக் கோரிக்கை மனுவை
படித்துப் பார்க்காமல்
குப்பைத் தொட்டியில் போட்டுவிட்ட சமயங்களில் கூட
அவள் கடவுளுக்கு
மறுவாய்ப்பு கொடுப்பாள்
கதவைச் சாத்திக்கொண்டு அழிச்சாட்டியம்
பண்றியா
காப்பித்தூளுக்கு
வெந்நீர் ஊற்றியபடி
கேள்வி கேட்கிறாளே
இப்போது இந்த ஃபில்டரும் தெய்வம்
வெள்ளி, அக்டோபர் 02, 2020
சுவடுகளை விழுங்குதல்
தெரியும்
திறந்துகிடக்கும் வாசலைத் தாண்டி
சுவடின்றி நீ கடந்தாலும்
அது எப்படியோ தெரியும்
உனக்கும்
************************************************
கூடத்தில்
படிந்துவிடும்
மணல்பார்த்து
ஆச்சர்யந்தான்
அதுவும்
திகைத்துப் போய்விடுகிறது
கூட்டிக்குவித்ததும்
******************************************
எனது
கடவுள் இவன்தான்
எனது
சாத்தான் இவன்தான்
எனது
மது இதுதான்
எனது
விஷம் இதுதான்
வரையறுத்துவிடவே
முடியவில்லை
முடியவில்லையா
தெரியவில்லையா
தெரியவில்லை
செவ்வாய், நவம்பர் 21, 2017
வண்ணக் குழம்போடு திரியும் கடவுள்
எந்த இரண்டு புள்ளியில் பொறி உறங்குகிறது
எனத் தெரியாது
மாற்றி மாற்றி உரசிக் கொண்டிருக்கிறோம்
நேசத்தின் இலைகளின்மேல் பனி மூடிக் கிடக்கிறது
பசிய ஒளி சுடராமல் இற்று விழுந்து விடுவோமோ
என்று நடுங்குகிறது கிளையோடு
காற்றோ தன்னிடம் வனம் உரையாடக் காத்திருப்பதாகப்
புறப்பட்டு வருகிறது
தப்பித் தப்பி நடக்கும் எல்லாவற்றுக்கும்
அமரத்துவம் பூசிவிட
வண்ணக் குழம்போடு
திரிகிறான் கடவுள்
அவனிடமிருந்து பிழைப்பதுதான் பெரும்பாடு
எனத் தெரியாது
மாற்றி மாற்றி உரசிக் கொண்டிருக்கிறோம்
நேசத்தின் இலைகளின்மேல் பனி மூடிக் கிடக்கிறது
பசிய ஒளி சுடராமல் இற்று விழுந்து விடுவோமோ
என்று நடுங்குகிறது கிளையோடு
காற்றோ தன்னிடம் வனம் உரையாடக் காத்திருப்பதாகப்
புறப்பட்டு வருகிறது
தப்பித் தப்பி நடக்கும் எல்லாவற்றுக்கும்
அமரத்துவம் பூசிவிட
வண்ணக் குழம்போடு
திரிகிறான் கடவுள்
அவனிடமிருந்து பிழைப்பதுதான் பெரும்பாடு
புதன், அக்டோபர் 26, 2016
செவ்வாய், அக்டோபர் 04, 2016
கடவுளும் நானும்
ஏனோ பாரமாக இருக்கிறது என்றேன்
உரக்கச் சொல்லிவிட்டேன்
போலிருக்கிறது
இருவேளை மட்டும் சாப்பிடலாம்
என்று ஒருவரும்
உலர்பழம் தாவரம் மட்டும் உண்ணு
என்று இன்னொருவரும்
உண்ணாதிரு இல்லையேல்
எதையும் எண்ணாதிரு என்று
மாறி மாறி எவரேனும்
சொல்லத் தொடங்கியிருந்தனர்
அந்த எல்லாருமே
நீயாகவோ நானாகவோ மட்டும்
முகம் கொண்டிருந்தது
தாள முடியாமல்
இந்த முகத்தை மாற்றக்கூடாதா
என்று முறையிட்டேன் கடவுளிடம்
மனுதாரரின் கையொப்பம் போல
எனக்கு முகம்
இந்த முகம் வேண்டுகையில்
இந்த முகம்தான் பெறும்
என்கிறார்
நான் கேட்பதென்ன நீங்கள்
சொல்வதென்ன எனக் கடிந்தேன்
அவரோ
கடவுள் என்பதை மறந்தவர் முகமெல்லாம்
மாற்றுவதற்கில்லை என்று உறுமுகிறார்
நானென்ன பெட்ரோமாக்ஸ் லைட் கேட்டேனா
நீங்கள்தான் ஆல்இன்ஆல் அழகுராஜாவா
என்று கேட்டு முடித்தபோது
பாரம் குறைந்துவிட்டிருந்தது.
இதுதான் ஆயிரத்தெட்டு
கவுண்டமணியாய நம
எழுதிய கதை
உரக்கச் சொல்லிவிட்டேன்
போலிருக்கிறது
இருவேளை மட்டும் சாப்பிடலாம்
என்று ஒருவரும்
உலர்பழம் தாவரம் மட்டும் உண்ணு
என்று இன்னொருவரும்
உண்ணாதிரு இல்லையேல்
எதையும் எண்ணாதிரு என்று
மாறி மாறி எவரேனும்
சொல்லத் தொடங்கியிருந்தனர்
அந்த எல்லாருமே
நீயாகவோ நானாகவோ மட்டும்
முகம் கொண்டிருந்தது
தாள முடியாமல்
இந்த முகத்தை மாற்றக்கூடாதா
என்று முறையிட்டேன் கடவுளிடம்
மனுதாரரின் கையொப்பம் போல
எனக்கு முகம்
இந்த முகம் வேண்டுகையில்
இந்த முகம்தான் பெறும்
என்கிறார்
நான் கேட்பதென்ன நீங்கள்
சொல்வதென்ன எனக் கடிந்தேன்
அவரோ
கடவுள் என்பதை மறந்தவர் முகமெல்லாம்
மாற்றுவதற்கில்லை என்று உறுமுகிறார்
நானென்ன பெட்ரோமாக்ஸ் லைட் கேட்டேனா
நீங்கள்தான் ஆல்இன்ஆல் அழகுராஜாவா
என்று கேட்டு முடித்தபோது
பாரம் குறைந்துவிட்டிருந்தது.
இதுதான் ஆயிரத்தெட்டு
கவுண்டமணியாய நம
எழுதிய கதை
திங்கள், ஆகஸ்ட் 12, 2013
சிறகின்துயர்..
சிறகு வேண்டுமேயென
வினா எழுப்புவார்கள்
ஒருபோதும் மிதக்கவியலா
கல்மனசுக்காரர்கள் ...
மரகதம்..கோமேதகம்
உயர்நீலம் என்றெல்லாம்
விலைப்பட்டியல் விம்மினாலும்
கற்கள் மிதப்பதும் பறப்பதும்
சாத்யமில்லை என
சிலிர்த்தபடி
சிறகுகள் பறந்து செல்கின்றன.
ஆன்மாவின் கோபுரத்தில்
அவை இளைப்பாறிச்
செல்வதை வெறித்தபடி
தேங்காய்ப் பத்தை கடித்துப்
போகிறான் பிச்சாண்டி
மிதந்தலையும் சிறகுக்கு
மனசென்ற மறுபெயர்
அவன் சூட்டுவதில்லை
பிரபஞ்ச இருளுக்கு
வெளிச்சக் கண்கள் பொருத்திச்
சிறகுகள்
திசையறிந்து அலைகின்றன...
உயரே உயரே...
உயரங்களெலாம் அன்பு சிந்திப்
பொலிவதைப்
பிச்சாண்டியைப் போல
நீங்களும் உணராது விலகுவதுதான்
சிறகின் நாளைய துயர்....
வினா எழுப்புவார்கள்
ஒருபோதும் மிதக்கவியலா
கல்மனசுக்காரர்கள் ...
மரகதம்..கோமேதகம்
உயர்நீலம் என்றெல்லாம்
விலைப்பட்டியல் விம்மினாலும்
கற்கள் மிதப்பதும் பறப்பதும்
சாத்யமில்லை என
சிலிர்த்தபடி
சிறகுகள் பறந்து செல்கின்றன.
ஆன்மாவின் கோபுரத்தில்
அவை இளைப்பாறிச்
செல்வதை வெறித்தபடி
தேங்காய்ப் பத்தை கடித்துப்
போகிறான் பிச்சாண்டி
மிதந்தலையும் சிறகுக்கு
மனசென்ற மறுபெயர்
அவன் சூட்டுவதில்லை
பிரபஞ்ச இருளுக்கு
வெளிச்சக் கண்கள் பொருத்திச்
சிறகுகள்
திசையறிந்து அலைகின்றன...
உயரே உயரே...
உயரங்களெலாம் அன்பு சிந்திப்
பொலிவதைப்
பிச்சாண்டியைப் போல
நீங்களும் உணராது விலகுவதுதான்
சிறகின் நாளைய துயர்....
ஞாயிறு, ஜூன் 09, 2013
புத்தனும் நானும்
வனமலர்கள் சில மலரக் கூடும்
வெடிப்பெலாம் குழம்ப
குளம் நிறையக் கூடும்...
ஓடியாச் சுள்ளிகளோடு
உயர்ந்து நிற்கும் மரம்
பசிய துளிர்களின் வாசத்தைத்
தானே தலையசைத்து
ரசிக்கக்கூடும் ....
விசும்பின் துளி வீழும்
தேவகணத்தைத் தொடரும்
இந்த வரிசையில்
தேவனுடையதோ-
சாத்தானுடையதோவான
கனியும் கிடைக்குமென ...
கிடைக்குமென
காத்திருக்கிறான்
பாசி படர்ந்த புத்தன்.....
பாசி
ஈரத்தின் விளைவல்லவென
நோன்பு தொடங்கு
முன் யுகத்திலேயே
உபதேசித்தது நினைவிருக்கிறது.
வெள்ளி, ஜூன் 07, 2013
எச்சத்தால் ஆனது
அன்பு ஒரு துளி
ஆசை ஒரு துளி
சினம் ஒரு துளி
வருத்தம் ஒரு துளி
அறிவு ஒரு துளி
கயமை ஒரு துளி
காதல் ஒரு துளி
கற்பனை ஒரு துளி
காமம் ஒரு துளி
வேகம் ஒரு துளி
விவேகம் ஒரு துளி
ஞானம் ஒரு துளி
மடமை ஒரு துளி
ஊக்கம் ஒரு துளி
சோம்பல் ஒரு துளி
முயற்சி ஒரு துளி
வக்கிரம்,உக்கிரம்,
தயை ,தாராளம் ,
இரக்கம் .....ஒருஒரு துளி
......
என்ன ஆயிற்றா ?
இன்னும் கொஞ்சம் விடலாம் "
"விடு..விடு..எதையாவது விடு ...!"
.......
அவன் கைக் குடுவையே
நீ..நான்....
சனி, மே 11, 2013
மன்னித்துவிடுங்கள்..
இது போதும் எனச் சொல்லும்
அதிகாரம் எனக்கில்லை ..
வேண்டும் என்பதும்.....
நானே விலகிடினும்
நிழலைப் படம்பிடித்துக்
கொண்டாட ஏழு பேர் குழு
அமைத்தாகிவிட்டது....
ஒளியின் வீச்சை
உள்ளங்கை மடங்கலில்
பிடித்துவிட்டதாக
அல்பதிருப்தி..
சொர்க்கத்தில் பறவைகள்
இப்படித்தான் சிறகடிக்கும்
என்கிறான் -தானே
தானியம் இறைத்தவன்போல் ...
ம்ஹூம் 'என்பதை
ம்'என்றும்
'ஐயோ'என்பதை
'ஆஹா'என்றும்
மொழிமாறாட்டம் நடத்துகிறது
நாவு..
ஆன்ம ஒளி குறித்த
சொற்பொழிவாற்றத் தயாராவதால்
கடவுளுக்கு
இன்று நேரம் தர இயலாது
புதன், மே 08, 2013
வெள்ளி, மார்ச் 22, 2013
வரம் மறந்த கடவுளும் ஒரு யாசகியும்
"இப்படியாக இரு "
உன் வலது உள்ளங்கை
உயர்கையில்
உரத்துச் சொன்னாயோ...
முணுமுணுத்தாயோ.....
நான்
இப்படித்தான் இருக்கிறேன்.
நீ சொன்ன :இப்படி"
இதுதானா?
நெற்றி வியர்வையாய்
சுரந்து பெருகிய
சலிப்பின் துளிகளை
வழித்து ..வழித்து ..
அந்தரத்தில் எறிந்துவிட்டு
இப்படியாகவே-இருக்கிறேன்...
சலிப்பு பெருகி..பெருகி
சூழ்ந்த நீர்ப்பரப்பின்
மேலொரு தக்கையாகவும்
நான்
இப்படித்தான் இருக்கிறேன்..
உன் வரம்
உனக்காவது நினைவில் இருந்திருக்கலாம்.
வியாழன், பிப்ரவரி 21, 2013
அபி உலகம் -14
அபி கடல் பார்த்தாள் ..
"எவ்ளோ ஓஓஓஓ ...தண்ணி...
யாரும்மா..ஊத்தினா...."
"ம்ம்ம் ...கடவுள்..."
"நீயும் அவங்கம்மா
மாதிரி இருக்கலாம்மா..."
டம்ளர் தண்ணீர்
கவிழ்த்தாலே குட்டு வாங்கும்
குட்டிக் கடவுளின் ஆதங்கம்...
****************************
கவனமாய்
முள் நீக்குகிறாள் அம்மா .
ஏன்மா..?
தொண்டையிலே மாட்டிக்கும் அபி.....
மாட்டிக்கிட்டா..
ம்ம்ம்ம் ..செத்துப்போய்டுவோம்..
எரிச்சல் தொனியில்
இன்னொரு கவளமும்
இன்னொரு நிமிடமும்
கடந்தபின் ...
"இந்த மீனோட அம்மா
இத சொல்லவே இல்லியாம்மா
உன்ன மாதிரி..."
துண்டு மீன் தட்டில்
துள்ளியது மாதிரி இருந்தது !
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வாழ்ந்தா....
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
நேசத்துக்கு விளக்கவுரையை அவள் ரத்தத்தால் எழுதும் சமூகத்தின் விஷப்பிஞ்சு அவன் வெம்பும் வாழ்வுகளைப்பற்றி ஒருநாள் பேசிக்கலைவோம் கல்லெ...
-
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
மஞ்சள் சுண்ணாம்பு உதிர்ந்த காரை ஒழுகும் கூரை அடியில் சத்துணவு உண்டுவிட்டு பெயர்ந்த சிமெண்டுக் குழியில் இலவச சீருடை மா...