சிறகு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறகு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், அக்டோபர் 04, 2016

சிறகின் வேறுபெயர்

நீள் பயணம் என்றுமட்டும் தெரிந்தது
காற்றில் படடக்கும் துப்பட்டாவின் 
கடும் மஞ்சள் நிறத்தை ஊடுருவி 
வெயில் இறங்க 
பூமி தொடவியலாது
உதிர்ந்த மரமல்லி கடும் மஞ்சளில்
விரவ
பொன்னொளி முகம் தடவ
சுருங்கிய நெற்றியும்
இடுங்கிய பார்வையுமாக
இறகுகளைத் தேடியபோது
ஏதோ தட்டுப்பட்டது
அதன் பெயர் கால்விலங்கென்றான் வழிப்போக்கன்



புதன், ஜூலை 06, 2016

செம்பருத்தி

புரிந்திருக்கும் என்ற
நம்பிக்கையை
ஒரு உச்சு 
இடித்து நசுக்கிவிடுகிறது
அது போக
அடியிலிருந்து சிதிலம் உதறி
எப்போ தலைதூக்க

*********************************************
இவ்வளவுதானே
இதற்குள் எதற்கு
அவ்வளவு

**************************************************
நடந்துவிடும் என்ற நம்பிக்கை
ஓடுடைத்துக் கொண்டிருக்கையில்
சிறகின் கோதுகளில்
முள்வைத்துத் தைக்கிறாயோ

**********************************************************
அந்த மீன்குஞ்சு
மரமேறுவதைப் பார்த்தேன்
பழம் பறித்து இறங்கியதோ
பழமாகித் தொங்கியதோ

********************************************************
இவ்வளவு இலைகளைப்
போர்த்திக்கொண்டு
உறங்கிய செம்பருத்தி
உதிர்ந்தபின்
பூத்திருந்த காட்சியை
ஊகித்து ஊகித்து....
பூத்திருந்தபோது ஒருவர் கண்ணிலாவது பட்டிருக்கலாம்

******************************************************************************

உதிர்த்துவிட ஏதுமிலா
சரஞ்சரமான கிளைகளோடு நிற்கையிலும்
அலைக்கழிப்புக்குக் குறைவில்லை



ஞாயிறு, நவம்பர் 24, 2013

அவளுக்கு டிசம்பர் வருகிறது



காற்றழுத்தத் தாழ்வுநிலை.....
மழை வரும் ,வரலாம்,வரவில்லை....
புயல் கிழக்கே,தென்கிழக்கே,மேற்கே தென்மேற்கே..
கடந்தது,
மாறியது,
வலுவிழந்தது..
மண்டலவிரதம்,அவசரமாலை,
வேன்,கார்,ரயில்,பேருந்துநிரம்பும் 
பக்தர்கள்,
பிச்சி,சாமந்தி,பட்டன்ரோஜா,கதம்பத்தோடு 
ஒருபந்து டிசம்பர் பூவும் கட்டிவைத்து
இம்மாதத்தைக் கடக்கிறாள் 
கனகாம்பர  சீஸனில் பிறந்ததால் 

கனகா வான கனகா.... 

திங்கள், ஆகஸ்ட் 12, 2013

சிறகின்துயர்..

சிறகு வேண்டுமேயென
வினா எழுப்புவார்கள்


ஒருபோதும் மிதக்கவியலா
கல்மனசுக்காரர்கள் ...

மரகதம்..கோமேதகம்
உயர்நீலம் என்றெல்லாம்
விலைப்பட்டியல் விம்மினாலும்
கற்கள் மிதப்பதும் பறப்பதும்
சாத்யமில்லை  என
சிலிர்த்தபடி
சிறகுகள் பறந்து செல்கின்றன.
ஆன்மாவின் கோபுரத்தில்
அவை இளைப்பாறிச்
செல்வதை  வெறித்தபடி
தேங்காய்ப் பத்தை கடித்துப்
போகிறான் பிச்சாண்டி 


மிதந்தலையும் சிறகுக்கு
மனசென்ற மறுபெயர்
அவன் சூட்டுவதில்லை
பிரபஞ்ச இருளுக்கு
வெளிச்சக் கண்கள் பொருத்திச்
சிறகுகள்
திசையறிந்து அலைகின்றன...
உயரே உயரே...


உயரங்களெலாம் அன்பு சிந்திப்
பொலிவதைப்
பிச்சாண்டியைப் போல
நீங்களும் உணராது விலகுவதுதான் 


சிறகின் நாளைய துயர்....

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...