ஞாயிறு, டிசம்பர் 30, 2012

அறிவாய் செறிவாய்..


நீலமென்றோ...
மஞ்சளென்றோ ...
சிவப்பு என்றோ..
அறுதியிட முடியா
வண்ணக்குழம்பின் கரையில்
நின்று
இவளுக்கு நிறம் தேறத் தெரியுமோ...?
தொக்கிய கேள்வியும்
மக்கிய மனதுமாய்ப்
பார்த்திருக்கிறேன் ...
லாவகமாய்த்
தூரிகை பிடிக்கிறாய்..
வாழி மகளே !

சனி, டிசம்பர் 29, 2012

நடத்தை பழகிடு மகனே

எனக்குப் பிறவாத
என் இனிய பொன்மகளே..!
எனக்குத்தெரியும்
நீ இதையும் தாண்டி
வருவாய்....வருவாய்..!
புதைகுழியில் உன்னை
மூடியிருந்த
மண்ணைக் குழைத்துத்தான்
மேடு சமைத்தாய்...
"அங்கேயே கிடக்காதே "
என உன்னை உலுக்கியதும்
உடன் மண் குழைத்ததும்
ஆணின் கரங்களும் தானே ..
நம்பிக்கையிருக்கிறது..
நீ
நடைபழகி முடிக்கும்போது
மன அழுக்கிலா மகன்கள்
உன்னுடன்
நடை பயில்வார்கள்!செவ்வாய், டிசம்பர் 25, 2012

தவிப்பின் குரல்

பேசு..பேசாதே..
உன் கண்ணும்  மறைத்திருக்கலாம் ..         
பொட்டு வை..வைக்காதே..
சிறிது,பெரிது,...நீளம்..குட்டை..
உன் மேலாடை ,ஆபரணம்..
பழசு புதுசு..,
மாறு..,மாறாதே..,
சிரி.. பல் தெரியவேண்டாம்...
இருள் தவிர்..
ஒளியும் தவிர்..,

எதையும் சொல்லுங்கள் கேட்கிறேன்..
எந்த வயதில்,இடத்தில்,
நலம் அழிக்க வாய்ப்பிலாத
பத்திரம் தருவீர்..?

சனி, டிசம்பர் 22, 2012

அபி உலகம் -11
வாசல் வேம்பு
வந்த கதை கேட்டாள் அபி
'காக்கா ,ஒரு வேப்பம்பழம்
சாப்டுச்சாம் ...
ம் ...
அந்த வெதைய  நம்ம வீட்டு
வாசல்ல போட்டுச்சாம் ..                                     
ம்ம்
அதுதான் வளர்ந்து மரமாச்சாம்..."
கையிலிருந்த ஆப்பிளோடு
காகத்துக்காகக் காத்திருக்கிறாள் அபி.
**********************
நூடுல்ஸ் காய்ப்பது
செடியிலா,மரத்திலா..
சாக்லேட்  காயா,பழமா...
காக்காய் பாட்டியிடம் திருடும்
வடை கீழே விழுந்தால்
வடை மரம் முளைக்குமா ?
அபியின் கேள்விகளோடு
விழித்திருக்கும் தாத்தாவுக்கு
கொஞ்சம் கைகொடுங்களேன் ....

புதன், டிசம்பர் 19, 2012

தடங்கல(ள )ற்ற பாதை

உன் வழிதான்
என் வழி
என் வழிதான்                                                           
அவன் வழி -அவள் வழி
அவள் ..அவன்..அவள்..
அவர்கள்..இவர்கள்...

யார் பாதம் புல் பூண்டு
மிதித்ததோ ..?
தடம் பிறந்தது என்றோ..?
அறியோம் பராபரமே ..
அடி பிரதட்சிண பாதயாத்ரையில்தான்
என்,உன்,அவன்,அவள்
வாழ்வு நடக்கிறது..


சேறோ ..,நீரோ,
அறியேன்...
ஒடிந்த முள்..,பறக்கப் பார்க்கும்
ஒற்றை இதழ்
எதையும் தலைதூக்க விடாது
பாதங்கள் சுற்றிக்கொண்டேயிருக்கின்றன
என்..,உன்..,அவன்..அவள்..,
இவன்,இவள் ..பாதங்கள்

செவ்வாய், டிசம்பர் 18, 2012

சற்றே ..பழுத்த இலைபோல்
படர்ந்து கிடக்கும்
ஆயாசத்தின் பின்
தேனுண்ட களைப்பா...
தேடிய பிழைப்பா....


ஞாயிறு, டிசம்பர் 09, 2012

வெள்ளி, டிசம்பர் 07, 2012

"ஆம்பிள சட்டை "                                   
பிரிய   நடிகை 
காதலன் பிரிவை 
அவன் சட்டை நிரப்புவதாக 
பட்டன் திருகி நின்ற படம் 
அன்று -வினோதம்.
நாகரிகப் பெண்களின் 
தேநீர்ச் சட்டை வாசகங்கள் 
நாவலில் ,
கவர்ச்சிக்கோ,கேலிக்கோ.....

மடித்துவிட்ட

முழுக்கைச் சட்டையோடு வந்து 

பேசினால் -அவள் 

புரட்சிப்பெண் என்பது நம்பிக்கை!
.
பள்ளி நாடகத்தில் 

ஆண்வேட வாய்ப்பை 

அண்ணன் தம்பி உள்ளவளுக்கே 

தருவார் ருக்மிணி டீச்சர்..

எங்கள் வீடு போல், 

பாத்திரம் வாங்க உதவாத 

மாமாவின் கதர்ச் சட்டைகள் 

அத்தைக்குப் பிடித்ததேயில்லை.

யோசனைகளோடு ,

பழைய சட்டைகள் மடிக்கிறேன்-

சேலையின்மேல் அணிந்து 

கல் சுமக்கப்போகும் செல்விக்காகவும்,

நெல் உலர்த்தும் சந்திராவுக்காகவும் .

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...