நீதிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீதிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, செப்டம்பர் 20, 2020

இல்லாமற் போகவில்லை

 


வலிந்து சிரித்தல்
ஒற்றை அறைக்குள் நரகமான நாளில்
நீ முனைந்த முத்தம் 
அத்தனை கசப்பு
போதும் என 
மணிக்கட்டைத் தளர்த்திக்கொண்டபோது
புறங்கழுத்துக்குள்ளும்
தென்றல் புகுந்து எழுந்தது
தூரச்சிரிப்பு
தூரமுறைப்பு
நீதிமன்றங்கள் 
கூண்டுக்குள் வைக்கமுடியாத  
உறவு
கண்ணாடித்துகளை 
முறத்தில் அள்ளியபின்னும்
எங்கோ ஒன்று மினுக்குவதாகவே 
உற்று உற்று குனிந்து பார்க்கிறது
கதர்ப்பட்டு சேலையை 
ஞாபகமாக தூக்கிப்போட்டு விடவேண்டும்
அதன் புட்டாக்களுக்கு 
அவன் கண்ணாடியின் ஃபிரேம் ஜாடை

வெள்ளி, செப்டம்பர் 27, 2019

பச்சைய ரகசியம்

ஆமணக்கு நாலு செடி
இரண்டோ மூணோ வாழைக்குருத்து
மளுக்கென்று உடைத்துக்கடித்துக்கொள்ளும்
பிஞ்சுவெண்டை கொஞ்சம்
போடுமளவு சிறுதிட்டு
ஓரத்தில் நின்ற வேப்பமரத்தடியில் 
அமர்ந்துதான் 
நடவுக்கு நடுவில்
பழையதும் வெங்காயமுமாகப் பசியாறுவது
அழுத்தமான சாய்கிளையில் 
கயிற்றிலாடும் குட்டிப்படையெல்லாம்
ஊஞ்சல் ஊஞ்சலென
இதோ நீதிமன்ற வளாக வேம்பைப் பார்க்கும்போது
அந்தநாள் கண்ணிலாடுவதைப்போல
ஆடியிருக்கலாம்
பாகத்தகராறில் திட்டு எனக்கேயென
உடன்பிறந்தானை வெட்டுமுன்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...