சரியாகத்தானே இருந்தது
ஆமாம்
எல்லாம்
சரியாகத்தான் இருந்தது
சரியில்லை என்பது
உங்களுக்குத் தெரியும்வரை
சரியாகத்தானே இருக்கும்
உளுத்துப்போவது உத்திரத்துக்கே தெரியாது
*******************************************************
இருநூறுமில்லி பால்வாங்கி
நான்குபேருக்கு காபி கலந்து
மிஞ்சியபாலில் விளாவிக்குடிக்கும்
கழனித்தண்ணி'க்கும்
ஒருகை வந்துசேரும் பொழுதில்
காபியும் விலக்கி
விரதம் நீட்டிப்பாள் அம்மா
முதல்ஈடு இட்டிலியும்
வெங்காய சட்டினியுமாக
நசுங்காத தட்டில் அவர் பசியாற
பசியில்லையென
தாவணி திருத்தி இறங்குவாள் அக்கா
பழையது தம்பிக்கு விட்டு
***************************************************
அத்தனை பாத்திரங்கள் இல்லாத காலத்தில்
அத்தனை ஓட்டை இருந்தது
அத்தனை மழையும் இருந்தது