எறும்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எறும்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, செப்டம்பர் 27, 2019

உலக வழக்கம்

எப்படியாவது
அதை ஒருமுறை சுழற்றிவிட 
ஆசை இருந்தது
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் 
மேசைமேல் இருந்த
உலக உருண்டைக்கும்
அதே இருந்திருக்கிறது
**********************************************
கூட்டமாக வரிசையாக வரும் பழக்கத்தை 
எறும்புகள் மாற்றிக்கொண்டு விட்டனவா
நடு முதுகில் ஒன்றே ஒன்று
தலையணையிலிருந்து
கன்னத்தில் இழைந்து ஏறியது ஒன்று
வளையலின் 
அழுக்கேறிய பூவுக்குள்ளிருந்து 
வெளியேறியது இன்னொன்று
புறங்கையிலிருந்து 

இடுக்குவழி உள்ளங்கை 
போகப் புறப்பட்டது ஒன்று
ஒவ்வொன்றாக நசுக்குவதோ தள்ளுவதோ 

அலுப்பூட்டுகிறது
ஊர்வதெல்லாம் எறும்பு 

என்ற பிரமையை ஏற்படுத்தும் முயற்சியில் 
உங்கள் இனவழக்கத்தைக் கைவிட்டுவிடாதீர்கள்
நாங்கள் வேறு
நீங்கள் வேறு


செவ்வாய், ஜூன் 11, 2019

எறும்பின் தடம்

ஒரு பூவைக்கூடக் காணோம் 
இந்தக்கிளையில்
வெயில்படா உள்ளிருப்பில்
 கசப்பின் ருசியறியாதோ

*****************************************************
புள்ளிபுள்ளியாய்ப் பூத்துக்கிடக்குது
 பருக்கைசுமந்த
எறும்பின் தடம் 
தரையெங்கும் 
தனக்கு வைத்ததில் 
காக்கை விட்டு வைத்தது சுமந்து
புண்ணிய கணக்கு அதற்குமுண்டோ

*****************************************************
எவ்வளவு முறை அழுதாலும் 
கண்ணீர் அதேகறையாகத்தான் படிகிறது
ஆனாலும் சொல்லத்தான் வேண்டும்
 இப்போதெல்லாம் அப்படியில்லை என்று
அழுந்தத் துடைத்துவிட்டு

*********************************************************
விசுக்கெனக் கடப்பவர்களைப் 
பார்க்கவே கூடாது
அவர்கள் பாட்டுக்கு
இனி பார்க்கவே முடியாதவர்களின் 
ஜாடையை 
பாவத்தை
நினைவூட்டிக் கடந்து விடுகிறார்கள்
*******************************************************************

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...