நம்பிக்கையின் இதழ்கள்சேர்ந்த கணம்
நானறியேன்...
கரையிலிருந்து "மொட்டு.."
எனப் பெயர் சூட்டினான்...
நகரவா,எழும்பவா,
மிதக்கவா,விரியவா,
சேரவா,தனிக்கவா...
இதழ்களைவிட
மேலதிக வினாக்களோடு
இலையுரசிப் பிரிந்து
அலைமோதிக் கிடக்க...
நீ
ஆகாயத் தாமரை
எனக் கூவி விடாதே....
நீராகாரம் பருகி வாழும்
பழமைவாதி நான்...
காற்றருந்தி வாழ இயலாது
