இந்தக் கதவிருக்கிறதே
கதவு
இரக்கமேயில்லை அதற்கு
பின்னால் உன்முகம் இருக்கும்போது திறக்காது
வரக்கூடும் என்ற நம்பிக்கை தரும்படியும்
அடைக்காது அழிச்சாட்டியம்
அப்படியே
என்றொரு
கொண்டி ஆட்டம்
எது சாந்தம்
என்றொரு தேடலின்
பின்னே
கண்டுகொண்டேன்
கணகணவென்ற மணியோசையோடு
பம்பை உடுக்கை கொட்டி
இரக்கமின்றி ஆடவைக்கும் உன்னை
ரௌத்திரசாந்தா