athmaram mohan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
athmaram mohan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், அக்டோபர் 23, 2018
திங்கள், அக்டோபர் 15, 2018
பிரிவுழலுதல்
இவ்வளவு காலமிலாது
மகுடேசுவரனிடம்
யாரோ இப்போது ஏன் கேட்கவேண்டும்
இவ்வளவு காலமிலாது
மனுஷ்யபுத்திரன் இப்போது
ஏன் இதை எழுதவேண்டும்
இவ்வளவு காலமிலாது
மனுஷ்யபுத்திரன் இப்போது
ஏன் இதை எழுதவேண்டும்
நழுவிச்செல்லும் காலக்கோட்டில்
இவை ஏன் தவறாது என் மனதுக்கு வரவேண்டும்
பிரிவுழல்தல் என்பது
என்றாவது சந்தித்துவிடக்கூடிய
உறவின் தற்காலிகப் பிரிவு
தற்காலிகச் சோகம் என்று அறிவு
பிரிவுழல்தல் என்பது
என்றாவது சந்தித்துவிடக்கூடிய
உறவின் தற்காலிகப் பிரிவு
தற்காலிகச் சோகம் என்று அறிவு
ஏன் கோனார்உரை புரட்டவேண்டும்
நிகழ்தகவில் தப்பாத
நிகழ்தகவில் தப்பாத
இவற்றையெல்லாம்
மறதியின் இழுப்பறையில் பூட்டுவதா
புறக்கணிப்பின் புகைபோக்கிவழி வெளியேற்றுவதா
புறக்கணிப்பின் புகைபோக்கிவழி வெளியேற்றுவதா
சுருணைத்துணியால்
வெற்று மேசையைத் துடைக்கிறேன்
கவனமின்றி அதனாலேயே கண்ணீரையும்
பிறகு பார்த்தால்
கவனமின்றி அதனாலேயே கண்ணீரையும்
பிறகு பார்த்தால்
அது உன் பழைய வேட்டித்துணி
ஞாயிறு, அக்டோபர் 14, 2018
21 5 18
மௌனமாக இருக்கும் ஆழியை
என்னவென்று சொல்வது
அலை கிடக்கிறதென்றா
மிதக்கிறதென்றா
இருக்கிறதென்றா
**********************************************
என்னவென்று சொல்வது
அலை கிடக்கிறதென்றா
மிதக்கிறதென்றா
இருக்கிறதென்றா
**********************************************
முன்னறை நுழையும்
கதிர்படும் இடத்தில்
உன்னைப்போலவே
உன்படம்
கதிர்படும் இடத்தில்
உன்னைப்போலவே
உன்படம்
மாறி அமர வேண்டுமா
என உனக்கும் சேர்த்து யோசிக்க வேண்டியிருக்கிறது
என உனக்கும் சேர்த்து யோசிக்க வேண்டியிருக்கிறது
******************************************************
சொல்லாக விம்மலாக
கண்ணீராக புலம்பலாக
நினைவாக வெடிப்பாக
இன்னும் என்னென்னவாகவெல்லாம்
உதிர்வாய்
கண்ணீராக புலம்பலாக
நினைவாக வெடிப்பாக
இன்னும் என்னென்னவாகவெல்லாம்
உதிர்வாய்
படமான நாள்
Uma Mohan Athmaram Mohan உடன்.
நண்டு குடைந்த வளையாகிப்போனது
உன் உடல் மட்டுமா
உன் உடல் மட்டுமா
இறுதிச்சொல்லென
இறுதித் தொடுகையென
இறுதிக்கனிவென
எது தங்கியிருக்கிறதென நினைவில்
அடையாளமில்லை
இறுதிக் களைப்பினை
மட்டும் ஏற்றிவைத்தாய்
இனி வாழ்நாளெல்லாம் முட்டிமோதி
எதிரொலிக்கப்போகும் அந்த
லீவ் மி அலோன் எனும் முனகலில்
இறுதித் தொடுகையென
இறுதிக்கனிவென
எது தங்கியிருக்கிறதென நினைவில்
அடையாளமில்லை
இறுதிக் களைப்பினை
மட்டும் ஏற்றிவைத்தாய்
இனி வாழ்நாளெல்லாம் முட்டிமோதி
எதிரொலிக்கப்போகும் அந்த
லீவ் மி அலோன் எனும் முனகலில்
கடைசி நம்பிக்கை
பலகணியின் கொடி வாடிக்கிடக்கிறது
வேரோடும் தொட்டியைப் பார்க்கிறேன்
திட்டிக்கசந்தபடியும்
நிலவை எட்டிப்பார்க்கையில்
சிவப்பைக்கண்டு மனம் விம்முகையில்
ஓரோர் சொட்டாக விழுவதை
புத்த மௌனத்தோடு அதுவும் ஏற்றுக்கொண்டிருக்கிறது
பசிய தளிரை வளர்த்துவிடுவேன் பார்
என்றபடி விரைகிறது நிலா
எழுதப்பட்ட நாள்1.05 18
apollo hospitals chennai
வேரோடும் தொட்டியைப் பார்க்கிறேன்
திட்டிக்கசந்தபடியும்
நிலவை எட்டிப்பார்க்கையில்
சிவப்பைக்கண்டு மனம் விம்முகையில்
ஓரோர் சொட்டாக விழுவதை
புத்த மௌனத்தோடு அதுவும் ஏற்றுக்கொண்டிருக்கிறது
பசிய தளிரை வளர்த்துவிடுவேன் பார்
என்றபடி விரைகிறது நிலா
எழுதப்பட்ட நாள்1.05 18
apollo hospitals chennai
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வாழ்ந்தா....
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
நேசத்துக்கு விளக்கவுரையை அவள் ரத்தத்தால் எழுதும் சமூகத்தின் விஷப்பிஞ்சு அவன் வெம்பும் வாழ்வுகளைப்பற்றி ஒருநாள் பேசிக்கலைவோம் கல்லெ...
-
அப்பா இல்லாத தீபாவளி அப்பா இல்லாத புத்தாண்டு அப்பா இல்லாத பொங்கல் இப்படித்தான் ஒவ்வொன்றாக வருகிறது அப்பா என்று மகன்களைக் குறிப்பிட்...
-
எப்படியோ முடிந்தது பிய்த்துப் பிடுங்கும் வறுமையிலும் தோடு மூக்குத்தியை ஆடை போல அடிப்படையாய்ப் பார்க்க அதனினும் கொடிதான பொழுதுகளில...