பேசவைத்து
பூப்பூவாய், ரிப்பன் கட்டி, வழுவழு சாட்டினில் குய்ங் குய்ங்கென அடிவைக்குந்தோறும் கூவும்படியாக விதவித காலணிகள் இருந்தாலும் அம்மாவின் பாதணிக்குள் ஏறி நடக்கத்தான் பாப்புவுக்குப் பிடிக்கிறது
பேசவைத்து
பூப்பூவாய், ரிப்பன் கட்டி, வழுவழு சாட்டினில் குய்ங் குய்ங்கென அடிவைக்குந்தோறும் கூவும்படியாக விதவித காலணிகள் இருந்தாலும் அம்மாவின் பாதணிக்குள் ஏறி நடக்கத்தான் பாப்புவுக்குப் பிடிக்கிறது
தினமும்
சன்னலுக்கு வரும் காகத்துக்கு
ஒரு
பிடி சோறு வைத்துப் பழகிய
பாப்பு
காக்காஃபிரெண்டாக
சொல்லிக்
கொடுக்கிறாள்
பக்கத்துவீட்டுத் தோழனுக்கு
*************************************
பிரௌன் நிறத்தை
அரைத்தீற்றலாக இழுத்து வைத்த பாப்பு
அங்குமிங்கும் குனிந்து நிமிர்ந்து
தேடிக்கொண்டிருந்தாள்பச்சை பென்சிலைக் காணோமாம்
பிரௌன் மண்ணில்
செடி எப்படி முளைக்கும் விசனத்தோடு
தேடல் தொடர்கிறதுஅங்குமா
அலுத்துக்கொண்டார் தாத்தா
************************************************************
கொஞ்சம் சின்னதுதான் ஆனாலும் ஒரு காகிதக்குல்லாவை தலைமேல் பாவனையாக வைத்திருக்கையில் வந்துவிடுகிறது சற்றே பாப்புவின் சாயல்
சுருள்பொட்டலமாகக் காத்திருக்கும் செம்பருத்தி வெண்ணிலவின் சிரிப்பினைக் காணாதும் பிரதி செய்து விடுகிறது மலர்ச்சியை
கண்ணாடியின் ஓரத்தில்
சிறுதுண்டு வானவில்
மற்ற நீ எங்கே
***************************
இறங்கும் வெயில்
சற்றே படிக்கட்டில் இளைப்பாறுகிறது
அந்திமந்தாரை காத்திருக்கிறது
*************************************
சிறுகுவியல் மணலுக்குள்
போய்ப்போய் அளைந்த
விரல்களை
பாப்பு
எங்காவது
பத்திரப்படுத்தவேண்டுமாம்
************************************
நீயும்
என் சன்னலில்
நானும்
பரல்கள் உருள்கின்றன நடுவீதியில்
**********************************
நீ
வரையாவிட்டால் என்ன
தீர்ந்தா
போய்விடுகிறது
நெடுங்கோடு
**********************************
பகலைப் பிழிந்த சாறு
தயாராகிறது
அவரவர் கோப்பை
அவரவர்க்கு
பாப்புவுக்கு
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...