மின்வடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மின்வடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், அக்டோபர் 15, 2018

ஒரு காலத்தைய உணர்வு

உங்களுக்கு நிறைய 
மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன
முயல்குட்டியின் நீண்ட காதுகளைப்பற்றியும்
முரடான பசுக்குளம்புகள் பற்றியும்
ஆனாலும் 
அந்தக்காது நீளம்தான்
அந்தக்குளம்பு அழுத்தம்தான்
**************************************************************
கனத்த தார்ப்போர்வைக்கடியில்
நெளிய இயலாது தவிக்கும் மண்புழுக்கள்
வலியறியாது
 மின்வடங்களில் அமர்ந்து கரையும் காகம்
*******************************************************
காய்ந்து ஒட்டிக்கொண்டிருக்கும்
ஒரு காலத்தைய ரத்தம்
ஒரு காலத்தைய சதைத்துணுக்கைப் 
பிய்த்தெறிவதைப்போல
உதறமுடியா மண்ணின் பொருக்கு 
சிதம்பர ரகசியம்

மணங்கொண்டோர் அறிக
*************************************************************


புதன், மார்ச் 30, 2016

ஆணவ ஆபரணம்

சொற்கள் எதிரேதான் கிடக்கின்றன
சில துளிகளோடு காய்ந்த
தேநீர்க்கோப்பை
சாய்ந்த சாயமா
செய்தித்தாளின் படத்திலிருந்து சொட்டிய 
பச்சை ரத்தமா
எதுவென்று தெரியாத
கறை படிந்த மேசை மேல்
எழுந்து என்ன செய்யப்போகிறேன் போ
என்ற ஆயாசத்துடன் கிடக்கின்றன
தொலைக்காட்சி மின்வடத்திலிருந்து சொட்டும் ரத்தம் நின்று
ஐந்தே நிமிடங்களில்
அடுத்த அரிவாள்
ஒவ்வொரு சங்கமாக
ஆதரவு அறிக்கை வாங்கி
அடுக்குங்கள்
ரத்தப்பொட்டுகள்
நாளாவட்டத்தில் காய்ந்து
நீலமாகி ஆட்காட்டி விரல்நுனியின் ஆபரணமாகிவிடும்
சொற்கள் அப்படியே கிடக்கட்டும் மனசுபோல
உலர்ந்துகொண்டு....


ஞாயிறு, மே 10, 2015

பருந்தாவதன் அசாத்தியம்

sparrow 300தூசி.....
துடைத்துவிட்டேன்
இதுவாவது
முடிகிறதே
*******************
தெரியாமல் இருந்திருக்கலாம்
சிரித்தபடி
கடந்திருப்பேன்
*******************
நிறையப் பேசினோம்
நேற்றைக்கும் இன்றைக்கும்
ஆடைதான் மாற்றம்
பேசுவோம்
*******************
பருந்தாவதன் அசாத்தியம்
மட்டுமல்ல
உயர் அழுத்த மின்வடம்
பற்றியும் சொல்லிவிடவேண்டும்
ஊர்க்குருவிக்கு

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...