manasu kadavul vaaippu minnal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
manasu kadavul vaaippu minnal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மார்ச் 23, 2012

யுகங்கள் தோறும்

காரை பெயர்ந்த 
கட்டைச்சுவர் ..
புதுக்கருக்கில் 
சுவரொட்டி மறுக்கும்                                                          
ஆள் உயரம்...
...............
மதில்கள் மாறினாலும் 
விரிந்த விழிகளோடு 
பூனை அங்கேயே...
கண்ணாடிச் சில்லும் 
கம்பிவலையும் கூட 
அரூபமாய்த் தள்ளிவிட்டு 
தன இடம் விடாமல் 
எப்போதும்போல் 
இப்போதும் பூனை...
மதில் நிலையற்றது !
பூனை நிலையானது!     
                                        
19 3 12 உயிரோசையில் வெளியானது
 
 
 
 
 

வெள்ளி, மார்ச் 16, 2012

பாராட்ட வருகிறார்கள்



அவசரமாய் 
 
ஒரு ஆளுயரக்கண்ணாடி தேவை!
 
சம்பிரதாய வாழ்த்து ,
 
அழுத்தும் கைகுலுக்கல்,
 
பொய்யெனப் புரியும் 
 
புனைந்துரைகள் 
 
எல்லாவற்றுக்கும் 
 
முகநூலின்
 
ஒற்றை விருப்பச் சொடுக்காக 
 
புன்னகைக்கலாமா?
 
பல்....?
 
தலையசைப்பு 
 
சம்மதமாகவா ?மறுப்பாகவா?
 
மையமாகவா?
 
கண் பணித்துவிடுமோ...
 
சீரான சுவாசத்தோடு 
 
வெற்றுப்பார்வை தோதாகுமா?
 
பெருமிதம்?கூச்சம்?
 
''எவ்வளவோ பாத்துட்டோம்..?
 
இதற்குத் தானே ஆசைப்பட்டாய்....?
 
எது பொருந்தும்....?
 
அவசரமாய் ஒரு கண்ணாடி
 
அல்லது 
 
 ஒத்திகைக்கு ஒரு நல்ல துணை! 

                                            12 3 12 திண்ணையில் வெளியானது .

ஞாயிறு, பிப்ரவரி 19, 2012

வரமளிக்க காத்திருக்கும் தெய்வம்



இருள் கவிந்த இதயத்தில்
ஒளி
பரவக்காத்திருக்கிறது
ஜன்னல் சதுரம்...
பால்கனியின் கொடித்துணி .....
எதையும்
தாண்டிவரத் தயாராக ,
உன் கண் திறக்கக்
காத்திருக்கிறது!
ஒருவேளை நேரடியாக
'வெளி '- யின்
தரிசனம் தேடி
வெளியே வந்தால்
நேர்க்கோட்டு மின்னலாக
ஊடறுத்துப் பாயவும்
தயார்...
எழப் பிரியப்படாத
பூனையின் பசியோடு
இதயத்தை
தட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கிறாய்
எனத் தெரியாது காத்திருக்கும்
அது
நீ சோம்பல் முறிக்கையில்
தேநீர் அருந்தப் போய்விடலாம் . 

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...