இடுகைகள்

April, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பயணங்கள் முடிவதில்லை

படம்
மனிதர்களுக்கென்னரயிலேறிப் போய்விடுகிறார்கள் 
கசிந்த கண்ணீருக்கும்குலுக்கிய கைகளுக்கும் மென்தழுவலுக்கும் மௌன சாட்சியாய்க் கிடக்கும் நடைமேடையையும் உயரத் தூண்களையும் கழிப்பறை வாடை கருதாமல் பூவும் பிஞ்சும் உதிர்த்தபடி நிற்கும் பெயர் தெரியா இம்மரத்தையும் என்ன செய்வது…..

4 4 15-முகநூலில்

அவ்வளவு எளிதாக இருப்பதில்லை...தளைகளைத் தளர்த்திக் கொள்வது...
******************************************************
ஒரு புன்னகையால் 
உயிர்ப்பிக்கலாம் 
ஒரு புன்னகையால் 
கொல்லலாம்
புன்னகையால் மட்டுமல்ல....

*****************************************************
சொல் 
எல்லாம் 
சொல்லிவிடுமா

*****************************************************
நம்பிக் கொண்டே 
நடக்கிறோம் ...ப்போம்
எங்களுக்குத் தெரிய வேண்டாம் 
வேறெதுவும்

***************************************************
துயரங்களின் 
பின்வாசல் மட்டும் 
தெரிந்தால் போதும்

**************************************************
தேடிக் கொண்டிருந்தது
உண்மைதான்
இந்தப் பல்லி ஒலிக்காமல்
போய்த் தொலைந்திருக்கலாம்
*************************************************** நீளும் வரிசை 
முடிவதை நினைத்தால்தான் 
அச்சம் 
தொடக்கத்திற்குப் போய்விடவா...
****************************************************** யாராவது சொல்லுங்கள் 
எல்லாம் பொய் என்று 
யாராவது சொல்லுங்கள்
எல்லாம் முடிந்தது என்று 
யாராவது சொல்லுங்கள்
எதுவும் நடக்கவில்லை என்று
யாராவது சொல்லுங்கள்
எதுவும் சொல்ல வேண்டாமென்று
**************************…