பிரௌன் .பென்சில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரௌன் .பென்சில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், அக்டோபர் 07, 2020

பாப்பூ -1

 


தினமும் சன்னலுக்கு வரும் காகத்துக்கு
ஒரு பிடி சோறு வைத்துப் பழகிய
பாப்பு
காக்காஃபிரெண்டாக
சொல்லிக் கொடுக்கிறாள் 
பக்கத்துவீட்டுத் தோழனுக்கு
*************************************


 

பிரௌன் நிறத்தை
அரைத்தீற்றலாக இழுத்து வைத்த பாப்பு
அங்குமிங்கும் குனிந்து நிமிர்ந்து
தேடிக்கொண்டிருந்தாள்

பச்சை பென்சிலைக் காணோமாம்

பிரௌன் மண்ணில்
செடி எப்படி முளைக்கும் விசனத்தோடு
தேடல் தொடர்கிறது

அங்குமா
அலுத்துக்கொண்டார் தாத்தா


 ************************************************************


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...