வெள்ளி, மார்ச் 18, 2011

நீர்த்துப்போனது 

வெள்ளை தாவணிக்காக
வேண்டியநாள் போராட்டம் 
தேர் உண்டியலில் 
அடுத்த தேர்  செலவுக்கு சில்லறை 
மருதானிகிளைக்கு  
பண்டிகைவாழ்வு ......
மேஹந்திகோன் தலைமுறை 
கடைக்கண்ணால்
 புன்னகைக்கும் .......
பயணம் 

ஜன்னல் இருக்கை
எப்போதும் விருப்பம்தான் 
கதவடைத்து திரைபோட்டு 
இருளில் நழுவும் 
குளிரூட்டிய 
பேருந்தோ தொடர்வண்டியோ 
.........
விருப்பம் என்ன வேண்டிகிடக்கு!
போயே தீரணும்  

naattam

நாட்டம் 

அலட்சிய ஆடையும் 
அக்கறையில்லாததுபோல்
பார்வையுமாய் 
அவர்கள் பேசியதெல்லாம் 
என்ன?
ஆண்டுகள் கடந்தும் 
விளங்கவில்லை 
அன்றைய தோழிகளே 
எவரேனும் கண்டுவிட்டீர்களா 
மதகடி கூட்ட ரகசியத்தை   

திங்கள், மார்ச் 14, 2011


எனக்கே எனக்கா?
பந்துமல்லி பார்த்து
ரெண்டுமுழம் கேட்டா
பைக்குள் பழம்பூ !

 நான்பொருக்க
அவள் உதவ

எடுத்து எடுத்து போட்டதுல
ஏழெட்டு சொத்தை ...

ஊசல், தேசல் ....
காஞ்சது ,கிழிஞ்சது...
நான் வருவேன்னு யாரு சொல்லுவா
எனக்கு உண்மை தெரிஞ்சாகனும்  
மதிப்பிற்குரிய .....
என்ன செய்வதென்று 
தெரியவில்லை ....
எழுபது ரூபாய் அடக்கம் 
என்றபடி 
தந்து சென்ற அழைப்பிதழை! 
நான் ...எனது ...
மேடை ,மேசை ,காலணி
துடைக்க ,துடைக்க ,துடைக்க,
புடவைத்துண்டின் நிறம் பார்த்துத் 
தோன்றியது ........
அவசரப்பட்டிருக்கவேண்டாம் !

சனி, மார்ச் 12, 2011

"Like"


exchange offer

கார்டூன் நாயகர்கள் 
மட்டையும் பந்தும்
சுழற்றி விசிறும் சூரர்கள் 
டிராகன்    மிக்கிமௌஸ் 
குளிர்பதனப் பெட்டிமேல் 
மகன்களின் குழந்தைப்பருவம் 
அழுதுபுரண்டு  முட்டி 
அடிவாங்கி 
ஒட்டிய ஸ்டிக்கர் சுமந்த 
கதவு 
கழற்றிவிட்டு தரலாமா?  
>

mugavari maariya thiruvizhaakkal

பிட்சாடனர் வீசும் 
மாம்பழமும் 
ராஜகோபாலனின் வெண்ணை தாழியும் 
<நேரம்<தூரம்< வெட்கம்....
கூட்டம் ,வியர்வை 
---தள்ளுபடி!
அட்சய திருதியை 
அட்வான்ஸ் புக்கிங் 
ஏ சி கடையிலையே நமக்கு தாங்கல !
பூக்கள்  விற்பனைக்குதான் சருகு ஒன்று மொட்டுகளை    தொடுத்துக்கொண்டிருநதது   

ஆசுவாசம்

  என்னதான் ஆகிவிடுகிறது இந்த நேரத்திற்கு ருக்கு பெரியம்மா கால் வெற்றிலையும் காலே அரைக்கால் கொட்டைப் பாக்குமாக அதக்கிக் கொள்வாளே அந்த கா...