அச்சம் ஆத்திரம் .குறட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அச்சம் ஆத்திரம் .குறட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, பிப்ரவரி 05, 2016

நடப்பு







ஆமோதிப்பதையே விரும்புகிறீர்கள்
குழந்தையின் சிணுங்கல் கூட
எதிர்ப்புக்குரலோ எனஅஞ்சுகிறீர்கள்
கொசுவிரட்ட
இடமிருந்து வலமோ
வலமிருந்து இடமோ
திரும்பும் தலைகளைக் கொய்யவும்
உங்கள் வாட்கள் தயங்குவதில்லை
அச்சமே ஆபரணம்
ஆத்திரமே ஆடை
எச்சரிக்கையாய் நாங்களும்
எரிச்சலாய் நீங்களும்
உலவும் மேடை
அதிர்கிறது இடைப்பட்டோர் குறட்டையில்




வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...