கிருமிநாசினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிருமிநாசினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, அக்டோபர் 02, 2020

கொரோனா வாழ்க்கை

 

கொரோனா வாழ்க்கை 

பசி மிஞ்சி
குடல் இறுக்கும்போது
காத்திருங்கள்
அரண்மனை போலொன்று
ஆகாயத்தில் மிதக்கும்
கையசைத்தபடி ஏறி வருவார்கள் 
எவ்வளவு பசிக்கிறதென கணக்கெடுக்க
உளவு பார்க்கிறதோ என
ஓடி ஒளியாதீர்கள்
அப்புறம் உங்கள் பசி
கணக்கில் வராமலே போகும்

*****************************************

 ஒவ்வொருவரிடமும்
ஒரு தாளை வழங்கியது
அக்கிருமி
ஒவ்வொருவரும் தமது பங்காக சிறிது
நஞ்சைத் தோய்த்தனர்
ஒவ்வொரு வீட்டுக்குமாகப் 
பிரதி அனுப்பி முடித்தும்
மிச்சமிருக்கிறது நஞ்சு
அதற்கென்ன 
அடுத்த வாய்ப்பு இல்லாமலா போகும்

 *******************************************

கழுவிக்கழுவிக் கைகளுக்கென்று
பிரத்யேக வாசமேயில்லை

கைகழுவித் திரவ வாசனை
வீட்டில் அரூபமாக மிதக்கிறது

அதன்மேல் நடந்து
அதோடு கைகலந்து
அதோடு புரண்டு

அதோடு உறங்கி
அதையே கொப்புளித்து....

பானங்களின் சுவையை மாற்றிவைத்தவன் யார்

***************************************************

 

வட்டங்களுக்குள்
நிற்கப்பழகு
ஆரத்தழுவாதே
அளவாய்ப்புன்னகை செய்
தூரதூரமாய் நில்
தொட்டுப்பேசாதே
முகத்திரை மறவாதே
ஒரு பை எடுக்க மறந்தவர்க்கெல்லாம்
புகுந்தவீடு போகும் பெண்போல் பாடம்
எதுவும் ஏறாதபோது
எதிர்த்தெருவில் ஒருவர்க்கு
என்றால்போதும்


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...