மரணத்துக்கு எண்ணிக்கை தெரியும் என்பது நம் நம்பிக்கை
சாவுற வயசா
என்று சொல்லத்தொடங்கியது அதனால்தான்
சமயத்தில் மரணம்
தூங்கிவிழுந்து கணக்கை மறந்துவிடுகிறது
சாவின் விசை
தாறுமாறாய்
அழுத்தப்பட்டிருக்கும்
காலத்தில்
அவனை விடாதே
அவனை விடாதே
என்று துணைப் பாத்திரங்கள் கூவுகின்றன
யாராவது துப்பாக்கியைப் பிடிக்க மாட்டார்களா
என்று ஜோக்கர்கள்
சுற்றுமுற்றும் பார்த்து விழிக்கிறார்கள்
ஹீரோ இல்லாத படங்கள் இப்படித்தான்