இடுகைகள்

December, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இயல்புநிலை

படம்
எல்லாம் சரியாகிவருகிறது என்ன 
அடுப்பு ஏற்ற வாய்க்கவில்லை
இன்னும் பொட்டலங்கள் வேண்டியிருக்கிறது
கும்பி அடங்க
இன்னும் யாரோ தரும் ஆடைகளில்
மானம் காத்துக் கொள்கிறோம் கூரை எங்களுடையது போல இல்லை
பள்ளிகளில்
அலறித்தவித்து
வெளியேறிய நேரத்தின் பாதைகள்
சூழ்ந்திருந்த நீர்
எங்கள்
கைரேகைகளையும் அழித்திருப்பதைத் தவிர
எல்லாம் சரியாகி வருகிறது மழை ,ஆறு,ஏரி,குளம்,தண்ணீர்
இதெல்லாம் கேட்ட மாத்திரம்
நடுங்க வைத்த கெட்ட வார்த்தைகளாக
இருந்தது மாறி
பாரம்பரிய கெட்ட வார்த்தைகளைக்
கண்டுகொள்ள முடிவதால்
இயல்புநிலை
திரும்பித்தான் விட்டது போலும் வாசலில் குழையும் சொறிநாய்க்கு
ஒருவாய் போட்டால் மட்டுமே
சோறுண்ணும் பழக்கமுள்ள
கைப்பிள்ளைக்குத்தான்
எப்படிப் புரிய வைப்பது
வாசலுமில்லை
நாயுமில்லை
சோறுமில்லை என்ற
இந்த இயல்பு நிலையை
கீற்று இணைய இதழில் 

டிசம்பர் பூக்கள் 2015

எப்போதும்போல்
அழுத்திஅழுத்தி..மீண்டும் மீண்டும் ஈரத்தைத் துப்புரவாக மிதியடியில்
துடைக்கிறேன் இதுவும் குற்ற உணர்ச்சி
தருவதாக
இந்நாட்கள் நெருக்குகின்றன     (மழை வெள்ளத்தில்  சென்னையும் கடலூரும் தத்தளித்த நாட்கள் ) ************************************************
ஏகப்பட்ட விளக்கு இருள் இருக்கிறது இருளாகவே

*****************************
துண்டு போடு
உடை
நொறுக்கு
துளியாவது கிடைத்தால் சரி ******************************************
நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் கை கழுவிக்கொண்டான்
சாக்கடைத்துளி
உதறினான்
சாக்கடைத்துளி வாருங்கள்
சுத்தமாகிவிட்டது அவ்விடம்
அவனுக்கு
என்ன வேண்டுமென
நாம்
அமர்ந்து பேசலாம் **************************************** ஒன்றையே பேச
உலகம் அனுமதிப்பதில்லை
ஒன்றே நிலையான
வாழ்வு
இதில் அடக்கமில்லை ************************************** புரியாது எனத்தெரியும்
இவ்வளவு....
இப்போதுதான் தெரியும் ************************************* உயரம் உன் பார்வை
துயரம்
அது வெறும் வானம் **************************************