இடுகைகள்

September, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கானேக விழைந்தேன்...

படம்
தானியம் கொறிக்கவும் மறந்துபோன
உறிஞ்சல் அலகுகளை பூவிதழ்களாக்கியுள்ளன
பழச் சாறு தொங்காத்  வனத்தில் நீ வாழப்போவதெப்படி....? அங்கலாய்க்கிறாள் அக்காக் குருவி..
நதிகளே இல்லாத மணற்பரப்பிலும் நீ கூவித் திரிவது போல்தான் .. வெடுக்கென்று சொல்லி எழும்ப ..எழும்ப...ம்ஹூம்

எனக்குச் சிறகுகளும் உண்டாமே...
அவற்றை நித்திரைப் போதில் களவாடியவர்களையாவது  க்ண்டுபிடியுங்கள் .. சாத்தியமில்லை  என்றால் தயவு செய்து உடனே ஒரு ஜோடி வாங்கித் தாருங்கள்.... இணையக் கடைகளில்  கிடைக்கும்தானே .....