ஃபிரிட்ஜ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஃபிரிட்ஜ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், டிசம்பர் 06, 2021

பாதரசம்

 குக்கர் விசில் மறக்காது மாற்றாது

நறுக்கும் காய்கறி அளவு மீறாது
மேசைக்கரண்டி முட்டைக்கரண்டி
வித்தியாசம் நினைவிலிருத்தி
உப்பை
போட்டோமா போடலியா குழம்பாது
ஞாபகமாய் ஃபிரிட்ஜ் கதவு அழுத்தி மூடி
சின்னது பெருசு பார்த்து தழல் வைத்து
நினைவாய் சிலிண்டர் திருகி
வெறும் ரசம் சோறு வை போதும்
அவனுக்குக் காய்ச்சல்
அவனுக்குக் குழப்பம்
அவனுக்குப் பதைப்பு
கல்லால் கட்டி
சாந்தால் மெழுகிய பேதைப் பெண்ணே...
ஆவன செய்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...