வாழையிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழையிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், அக்டோபர் 23, 2018

மழை வழியும் ஜன்னல்

நிழலோ வெயிலோ 
நிற்க ஒன்று இருக்கிறதே
வேறெப்படி தேற்றிக்கொள்ள
வெற்று கணங்களை

**********************************************
நீங்கள் புறக்கணிப்பீர்கள் 
எனத்தெரிந்தாலும் 
காற்றோடு போராடிக்கிழிந்து 
உங்கள் கொல்லை வாழையிலேயே 
தங்கிவிடுகிறது இலை
ஆறுதலாக இரண்டு துளி
தெளித்து நகர்கிறது மழை
***************************************************
மழையின் குளுமை மனங்கொள்ள
வா
என்னை ஓரமாக எடுத்து வை 
யாரைக் கூப்பிடுவதெனத் 
தவிக்கிறது தொட்டிச்செடி

***************************************************
பார்ப்பதற்கு நீங்கள் தேடுவது போலவே
விழுவதற்கு மழையும் தேடுகிறது 
ஒரு கண்ணாடி சன்னலை
அப்போது வழிந்த அழகின்
நினைவு
அதற்கும்


சனி, ஏப்ரல் 16, 2016

ஏப்ரல் பூ -4

நிலவைக்காட்டுகிறேன்
விரலைப் பார்த்துக்
கொண்டிருக்கிறாய்
***************************************
சிறு பயணம்தான்
இருங்கள்
அந்தக் கருங்குருவியுடன்
போய் வருகிறேன்
சன்னலின் வானத்துக்குள்
மூன்றே விளக்குத்தூண்கள்


வாழையிலை தானே 
காற்றே போதும்
உறையிலிடு வாளை
****************************************
எப்போதாவது 
தெரியட்டும் வெளிச்சம்
இருள் பழகிய கண்கள்
இருப்பதன்
அர்த்தம் சொல்ல
********************************************
உத்தரவு வரும்போது
மட்டுமே
தோட்டாவா கத்தியா
எனத்தெரியும்

அதுவரை புன்னகைத்திரு
இதுவும் சொல்லப்பட்டதே
********************************************

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...