வெள்ளி, பிப்ரவரி 07, 2014

அடையாளம்


அன்பைக் கண்டுகொள்ள
ஆவல் கொண்டேன்
என்னை நான் பார்க்கும் தருணம்
தெரியுமென்றாய் …….
சலனம் துடைக்க
பொதியில் அடைந்த உயர்காகிதச்சுருள்
உதவாது என உணரும்போது
அது பெருகித் தளும்பி
வழிந்து கொண்டிருந்தது…

ஒளிக்கீற்றைத் தொடர்ந்து
நடந்து கொண்டே இருக்கிறேன்
வெளிச்சம் எக்கணமும்
என்னுள்
நிரம்பிவிடலாம் என்று.

இளைப்பாறல் உறக்கம் அல்ல
உறக்கம் இளைப்பாறல் அல்ல
என்கிறாய்.
என் பாதங்களைப் போலவே
முன்பின்னாக மாற்றிப் போட்டுக் கொண்டே
போகிறது வானம்…

வானவில் பார்க்கலாம் என்றவன்
பாலை தாண்டி எப்போது வருவானோ…
நானோ மழைவானத்தின்
அடிவாரத்தில் நின்றும்
அவன் திசைப் பார்வையோடு.

பிடிமானம்

  ஜிலுஜிலு ஓடையிலே ஹே ஹே என்று பாடிக்கொண்டிருந்த பன்னீர் சித்தப்பா இரண்டுநாளில் தீக்குளித்து செத்தார் எல்லோரும் பன்னீரு நல்லவன் வல்லவன் அதைக...