பிரியமிருந்திருக்கலாம் பார்வையிலும் சொல்லாது போனவற்றை பல்லாங்குழிச் சோழி போல இப்போது எதற்கு இட்டு அள்ளி இட்டு அள்ளி ************************************
கொலோனில் நனைந்த
கைக்குட்டையோடு
முடிந்துவிட மறுக்கிறது காய்ச்சல்
அது பற்றுக்காக
என்று புரிய வரும்போது
ஒற்றை மாத்திரையை
நீட்ட மாட்டாய்தானே
*****************************************
என்னவோ உறுத்துகிறதே
அட தளராடையைத் திருப்பிப் போடுகிறேன்
மாற்றியாயிற்று
கண்டுபிடிக்கவும்
மாற்றிப்போடவும்
இப்படி முடிந்தால்
எவ்வளவோ உறுத்தல் சரியாகியிருக்கும்
************************************
உரச்சாக்குகளை இழுத்துத் தைத்து
கூரைக்குள் திணிக்கிறவனிடம்
கைநீட்டி யாசகம் கேட்கும்
மழைதான்
இதோ உங்கள் குரோபேகில்
இறங்காமல் வழிகிறது