isai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
isai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜனவரி 16, 2012

நிரம்பா அரங்கம்





ஓரிருவர் ...
தொடர்பிலா திக்குகளில்.... 
அலைபேசி நோக்கியவாறு 
சில தலைகள் 
அருகே எவருமிலா 
மூலைஇருக்கையை 
கவனிக்க வசதிஎனத் 
தேர்ந்திருக்கலாம் .
தாமதமாக
சபை நிரம்பலாம்...
**************************************
எந்த சமாதானமும் 
தராத நிம்மதியை 
காலி இருக்கைகளுக்கும் 
காதுகள் இருக்கலாம் 
என்ற கற்பனை தந்தது...
இருக்கைதோறும்
கைப்பிடிபோல் 
ஈரிரு காதுகள் முளைத்தன ...... 
காத்திருக்கும் செவிகள் 
மீதான காதல்  
தூறலாய்த் தொடங்கி 
பெருமழையென நனைத்தது 
ஆளில்லா இருக்கைகளையும் .......
 

புதன், ஜனவரி 11, 2012

இப்போதும் பலிக்கவில்லை.....

தேவதைகள்
எப்படியிருப்பார்கள் ....
பாரதிராஜாவின் பாடல் போலா...
சித்திரக் கதைகளின்
சிறகுகளோடா .....
ஆடை மாற்றம்
நிகழ்ந்திருக்கலாமோ...
சலனமற்ற பார்வையா?
புன்னகைப்பது உண்டா....
அறியாமல்
தவறவிட்டு விடுவேனோ
அச்சத்தால் கேட்கிறேன்...
கேள்விகளை முடித்து
நிமிர்ந்தபோது
மேசையின் எதிர்ப்புறம்
அடையாளம் சொல்லமுடியா
நிறத்தில்
அழகிய மலர்
தேவதை வந்ததன்
அடையாளமாக...

செவ்வாய், நவம்பர் 29, 2011


தேய் பிறை அச்சம்




.

 பிடித்தபாடல்  
அலைபேசி அழைப்பில்
பதிய வேண்டாம்

அழைப்பின் போதெலாம்
ஒலித்து ஒலித்து
நம்
பிடிப்பு கரையலாம் ....

சமயா சமயமின்றி
ஒலிக்கும் பாடலை
கோபமாய் எரிச்சலாய்
நிறுத்த நேரலாம்

முழுமையாய்க் கேளாமல் 
உடனே எடுக்க 
திரையில் ஒளிரும் பெயர் 
நிர்ப்பந்திக்கலாம் 

புதிய எண் பார்த்து
யோசிக்கும் மனதுக்கு 
பாடல் எட்டாமலே போகலாம்...

இடம் பொருள் கருதி 
நாமே மென்னி திருகி 
அமைதிப்படுத்தலாம் 

இந்தப்பாடல் 
எதற்கென்ற 
விளக்கவுரை கேட்டு 
யாரும் நிர்ப்பந்திக்கலாம் 

ஞாயிறு, நவம்பர் 20, 2011

பாடலைக் கண்டேன்...


மாற்றித்தடவிய 
தூரிகையாய்
நிறம் கலங்கிய மேகம்...
அழைப்புமணிக்கு
விரைவதாய் நகர...

அலைபேசிக் கோபுரங்கள் 
மின்வடங்கள் 
மாறிமாறி
பாண்டி ஆடிக் கொண்டிருந்தன 
பறவைகள் .

முதிராப் பசுமையோடு 
காற்றில் நடுங்கியது நாற்று 

சுழலாக் குறுந்தகடு 
தாண்டி 
மனதில் அதிர்ந்து கொண்டிருந்த 
நரம்பொலியில்
கசிந்த விழியோரம் கண்டு 
கரிசனமாய்க் கண்ணாடி ஏற்றினாய் ....

இசை நின்றது ...!    



 தோழர் வேணுவின் கட்டுரை தொடர்ச்சி....##

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...