வியாழன், பிப்ரவரி 21, 2013

அபி உலகம் -14




அபி கடல் பார்த்தாள் ..
"எவ்ளோ ஓஓஓஓ  ...தண்ணி...
யாரும்மா..ஊத்தினா...."
"ம்ம்ம் ...கடவுள்..."
"நீயும் அவங்கம்மா
மாதிரி இருக்கலாம்மா..."
டம்ளர் தண்ணீர்
கவிழ்த்தாலே குட்டு வாங்கும்
குட்டிக் கடவுளின் ஆதங்கம்...
****************************
கவனமாய்
முள் நீக்குகிறாள் அம்மா .
ஏன்மா..?
தொண்டையிலே மாட்டிக்கும் அபி.....
மாட்டிக்கிட்டா..
ம்ம்ம்ம் ..செத்துப்போய்டுவோம்..
எரிச்சல் தொனியில்
இன்னொரு கவளமும்
இன்னொரு நிமிடமும்
கடந்தபின் ...
"இந்த மீனோட அம்மா
இத சொல்லவே இல்லியாம்மா 
உன்ன மாதிரி..."
துண்டு மீன் தட்டில்
துள்ளியது மாதிரி இருந்தது !

2 கருத்துகள்:

ramgopal சொன்னது…

அடுத்த சூப்பர் கவிதை. "டம்ளர் தண்ணீர் கவிழ்த்தாலே குட்டு வாங்கும் குட்டிக் கடவுளின் ஆதங்கம்"-- அருமை

உமா மோகன் சொன்னது…

ஆஹா செம ஸ்பீட் கருத்தா இருக்கே !அனுபவம் ..?

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...