பொருளறியாமல் .....
அலைகளினூடே சாய்ந்து ,
சரிந்து....
அடிவைக்கும்  பாதங்களை,
துடுப்புகளின் தீண்டலை,பாய்ச்சலை
 சுடுகதிர்களின் ஆக்கிரமிப்பை,
நீர்த் தட ஆறுதலை ,
உலவலின் விறுவிறுப்பை ...
எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன
கரையோர ஓடங்கள் ...


மௌனித்துக் கிடக்கிறது கரை...

முகட்டின் இப்புறமான
நதியின் தடமறியாது
மலையேறிக் கொண்டிருக்கிறது
கூட்டம்.

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
ரசித்தேன்... அருமை...
G.M Balasubramaniam இவ்வாறு கூறியுள்ளார்…

கடைசிவரிகளின் பொருளறியாமல் தவித்துக் கொண்டு........வாழ்த்துக்கள்.
ராமலக்ஷ்மி இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

அடையாளங்களின் சுமை

சிறகின் வேறுபெயர்