அப்பா இல்லாத தீபாவளி
அப்பா இல்லாத புத்தாண்டு
அப்பா இல்லாத பொங்கல் இப்படித்தான்
அப்பா இல்லாத பொங்கல் இப்படித்தான்
ஒவ்வொன்றாக வருகிறது
அப்பா என்று மகன்களைக் குறிப்பிட்டு
அப்பா என்று மகன்களைக் குறிப்பிட்டு
எனக்கான விளியும் இல்லாமல் போனாய்
இல்லாமல் போன உன்னைவிட்டு
இல்லாமல் போன உன்னைவிட்டு
இருக்கின்ற நாட்களைத்தான்
பற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது
ஆறாய்ப்பெருகிய கண்ணீரும்
அதிர்ந்தெழும்பிய விம்மல்களும்
அடக்கியோ அடங்கியோ
ஒற்றைக்கோடாக வழிந்தாய்
கலங்கிய குளமானாய்
செய்தியறியாது
யாரேனும் விசாரிக்கையில்
விளக்கம் சொல்லும்
என் சாதாரண முகத்தை
ஆறாய்ப்பெருகிய கண்ணீரும்
அதிர்ந்தெழும்பிய விம்மல்களும்
அடக்கியோ அடங்கியோ
ஒற்றைக்கோடாக வழிந்தாய்
கலங்கிய குளமானாய்
செய்தியறியாது
யாரேனும் விசாரிக்கையில்
விளக்கம் சொல்லும்
என் சாதாரண முகத்தை
நல்லவேளை
இதுவரை கண்ணாடியில் பார்க்க வாய்க்கவில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக