சமீபத்திய கவிதைகள் சில

-- என்னைத் தாண்டிய 
எறும்பு 
நிழலையும் ....
நான் ?
#################################

ஒரு குரோதம் 
ஒரு புன்னகை 
ஒரு விரக்தி 
ஒரு ஏக்கம் 
................
............
ரயில் பெட்டி போல்
யார் இவற்றைக்
கோர்த்தது
தடதடத்துக் கொண்டிருக்கிறேன்

#####################################
அச்சச்சோ 
சொல்வாய் எனத்தான் நினைத்தேன் 
வேர் இருக்குமென்றே 
நினைத்ததில்லை என்கிறாய் 
சுருட்டி விசிறிய லாவகம்தான் 
மளுக்கென கண் உடைக்கிறது
#########################################
வலியை உற்றுநோக்குவதுபோல் 
கொண்டாட்டத்தை 
உற்று நோக்கத் தோன்றியதில்லை 
நீயும் சொன்னதில்லை 
முழுநிலவுக்கும் 
சற்றே படபடப்பு இருக்கும்போல
நாளைமுதல்
கொஞ்சமேனும் ஒளித்துக்கொள்ள
வேண்டியிருக்கே என...
##############################
வரலாறு முக்கியம்தான் 
தையல் பிரிந்த 
ஆடை பற்றியே அவதானிக்காது
சற்றே திரும்பிப்பார் வரலாற்றை 
வந்துசேரும் ஊசிநூல் 
ஆடையோடு நிற்காவிட்டால் என்ன
தைக்கப்பட்ட உதடுகளோடும்
வரலாற்றைத்
திரும்பிப்பார்க்க முடியும்
படம் ;ராஜி சுவாமிநாதன்

கருத்துகள்

ரூபன் இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம்
வரிகள் நன்று
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Kalayarassy G இவ்வாறு கூறியுள்ளார்…
ஆயி மண்டபம் குறித்த என் பார்வை - நேரங்கிடைக்கும் போது வருகை தாருங்கள். இணைப்பு:- http://unjal.blogspot.in/2015/02/blog-post_25.html.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

அடையாளங்களின் சுமை

சிறகின் வேறுபெயர்